பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் # 1 i கூட் த்தில் ஒருவர், எதிர்க் கேள்வி கேட்டார். "சபையோட சம்மதத்துலதான் அவன் கேக்கான்... ஒழுங்கா பதில் சொல்லுவே..." கதிர்வேல் பிள்ளை, புரிந்துகொண்டார். செத்தது அவர் ஆளல்ல. நியாயம் பேசினார். "சின்னத்துரை. நீரும் இப்டி எடக்குமடக்கா பேசப் படாது... பதில் சொன்னா கொன்னா போடுவாவ அவங்க யாரு... ஒம்மோட தாயி பிள்ளிய... சொல்லும். சபை கேக்குதுல்லா..." சின்னான் மீண்டும் கேட்டான்: "கேட்டுட்டேன். இனும நீருதான் பதில் சொல்லணும்." "ஒனக்காவச் சொல்லல. சபைக்காவச் சொல்லுதேன். லாரி... எப்படி மோதிச்சுதுன்னு தெரியல. இவங்க தூக்கக் கலக்கத்துல வண்டிய குறுக்கா ஒட்டுனதா போலீசுகாரங்க சொன்னாங்க... பிரேக் இன்ஸ்பெக்டர் சொன்னாரு... என் மேல வழக்குப் போடப் போறதா வேற மிரட்டுனாங்க... நான் பிணத்த கொண்டு வந்ததே பெரிய பாடு..." "எனக்கும் சட்டம் தெரியும் சாமி. விபத்துல யாராவது இறந்துட்டா... போலீஸ் வழக்குப் போடாம இருக்க முடியாது... ஆனால் அந்த வழக்க தோக்கும்படியாயும் போடலாம்... இதனால அவங்களுக்குப் பணம் கிடைக்கும். செத்தவன் குடும்பத்துக்கு ஒண்ணும் வராது. இது ஒமக்கு தெரிஞ்சி இருக்கணும். ஏன்னா... போன வருஷம் ஒம்ம கொளுந்தியா மவன்... பிரைவேட் பஸ்ல அடிபட்டுச் செத்தபோது அவங்க குடும்பத்த வழக்குப் போடச் சொல்லி... பத்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத் திருக்கியரு... அதோட ஏழைங்கமேல. அர வட்டிக் கடனுக்கு வழக்குப் போட்டு.. ஜப்தி பண்ணத் தெரியுற அளவுக்கு கோர்ட் அனுபவ முள்ளவரு. ஒமக்குத் தெரியாதுன்னா... நம்பமுடியாது." "நம்புறதும் நம்பாததும் ஒன் இஷ்டம். நான் நடந்ததச் சொல்லிட் டேன்... நானே... பிரேக் இன்ஸ்பெக்டருக்கும், போலீஸ்காரங்களுக்கும்... அம்பது அம்பது ரூபாய் வாய்க்கரிசி போட்டேன்..." திடீரென்று பிணவண்டி ஒட்டிவந்த முனியாண்டி, பித்தம் தலைக்கேறியவன் போலவும், பித்தம் தெளிந்தவன் போலவும் கத்தினான். இருபத்தோரு வயதுக்குரிய மென்மைக்கும் திண்மைக்கும் இடைப்பட்ட குரலில் கத்தினான்: 'பொய். சின்னத்துரை கிழவன் சொல்றது முழுப் பொய். நான் கண்ணால பாத்தேன்... ஏய் கிழட்டு மூதேவி... நீ உருப்படுவியாடா..." எல்லோரும், அவனை வியப்போடு பார்த்தபோது, முனியாண்டி, ஹோவென்று பேரிரைச்சலை எழுப்பி விட்டு, பிறகு ஏங்கி ஏங்கி அழுது கொண்டே பேசினான். அந்தச் சமயத்தில் குமாரும், மாணிக்கமும், அங்கே