பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 12 ஊருக்குள் ஒரு புரட்சி வந்து சேர்ந்தார்கள். முனியாண்டி, விக்கி விக்கி திக்கித் திக்கிப் பேசினான்: "போலீஸ்காரங்க... கோடு கிழிச்சாங்க... லாரி டிரைவர கூட, அடிச்சாங்க... கொஞ்ச நேரத்துல லாரி மொதலாளி வந்தாரு. அவருகிட்ட... மொதல்ல. அதட்டிப் பேசுனாங்க... அப்புறம் சிரிச்சுப் பேசுனாங்க. அப்புறம் பிரேக் இன்ஸ்பெக்டர்னு ஒருத்தன் வந்தான்... அவனும் லாரி மொதலாளிய மிரட்டுனான். மிரட்டிக் கிட்டே எதையோ எழுதுனான். பிறவு... இந்தக் கிழவன் பஸ்ல வந்து இறங்குனான்... நான் ஒன்னு அழுதேன். இவனும் மொதல்ல லேசா அழத்தான் செய்தான். அப்புறம் போலீஸ்காரங்க இவன... தனியா கூட்டிக்கிட்டுப் போய் பேசுனாங்க... பிரேக் இன்ஸ்பெக்டர் எட்டி எட்டிப் பாத்தாரு... பிறவு... லாரி முதலாளி, ஒரு ரூபா நோட்டுக் கட்ட இந்தச் சின்னத்துரை கிழவன்கிட்ட குடுத்தான். இவன். உள் சட்டப்பைக்குள்ள வச்சான்... பிரேக் இன்ஸ்பெக்டர் எழுதுனத கிழிச்சிப் போட்டுட்டு. இன்னொண்ணு எழுதுனாரு... போலீஸ்காரங்க கிழிச்ச கோட்ட அழிச்சிட்டு... நடு ரோட்ல குறுக்கா கோடு போட்டாங்க... இவ்வளவையும்... நான் கண்ணால பாத் தேன். ரெண்டு கண்ணாலயும் பாத்தேன்... சத்தியமாய்ப் பார்த்தேன்..." கூட்டத்தில் பயங்கரமான நிசப்தம். எல்லோரும் சின்னத்துரையை எரித்துவிடுவதுபோல் பார்த்தார்கள். கர்ணமும், மணியமும், அவர் பைக்குள்ளே கண்களை விட்டார்கள். சின்னத்துரை, குமாரை பரிதாபமாகப் பார்த்தார். சின்னான் அதட்டினான்: "எவ்வளவு வாங்குனியரு. ரெண்டு பினத்த எவ்வளவு ரேட்டுக்கு வித்திரு. சீக்கிரமாச் சொல்றது. ஒமக்கு நல்லது..." குமாருக்கு, கோபம் கொப்பளித்தது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது மூத்தோர் வாக்கு. தன் தந்தை சொன்ன மந்திரச் சொல்லுக்கு, அவர்கள் யந்திரம்போல கட்டுப்படவில்லையானால் என்ன அர்த்தம்? என்னைப் பார்த்தவுடனேயே தாசில்தார் எழுந்து நிக்காரு... சப்-இன்ஸ்பெக்டர் சலாம் போடுறாரு... கலெக்டர் கைகொடுக்காரு... இந்தக் கேடுகெட்ட பஞ்சப் பராரி பயலுவளுக்கு... அவங்க அப்பா பதில் சொல்லிக்கிட்டு நிக்கதா...? இதை, அவன் அனுமதிப்பதா...? நாட்ல சட்டம் ஒழுங்கு எப்படிக் கெட்டுப் போச்சு... குமார், மேனியாட விழி ரத்தச் சிவப்பாக, பயங்கரமாய் கத்தினான்: "நீங்க வாங்கப்பா... அவங்க என்ன பண்ணனுமோ... பண்ணிக் கட்டும். நாய்க்கும், பேய்க்கும் பதில் சொல்லிக்கிட்டு... வாங்கப்பா..." குமார். சொன்னதை செயல்படுத்துபவன். ஆகையால் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, இழுத்தான். இப்போது சின்னானால், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குமாருக்கு இணையாகக் கத்தினான்.