பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 ஊருக்குள் ஒரு புரட்சி முடியுமா... அது முடியுமுன்னால் செய்யி... ஒனக்குக்கோடிப்புண்ணியம்" என்று சொல்லிவிட்டு, நயினாரம்மாவின் மார்பில் தலைவைத்து அழ, நயினாரம்மா, அவள் முகத்தைத் தடவிவிட்டுக் கொண்டே கதறினாள். சின்னான். அந்தப் பெண்களை பிச்சாண்டியிடமும், ஆசாரிப் பையன் ஆறுமுகத்திடமும் ஒப்படைத்துவிட்டு, ஆணித்தரமாக அதட்டினான். "இந்த மாதுரி அழுதழுதே அழ முடியாமப் போன ஜனங்களா போயிடாதிங்கம்மா... சின்னத்துரை... என்ன சொல்றீரு..." பரமசிவம், சின்னத்துரைக்குப் பதிலாகப் பேசினார்: "என்னடா சின்னான்... சேரியாட்கள கொண்டு வந்து மிரட்டி. வழி மறிக்கிற அளவுக்கு வந்துட்டியா? மேல் ஜாதிக்காரங்கள... அவங்க ஊருக்குள்ள வந்தே மிரட்டுற அளவுக்கு வந்துட்ட இல்ல? மேல் ஜாதிக்காரங்க கையுல... ഖsതണ്tu് போட்டிருக்கோமுன்னு நினைக்கியா... எங்க ஆட்கள் சும்மா, பேசாம இருக்கிற தைரியமா?... பறப்புத்தி என்கிறது..." பரமசிவத்தின் ஜாதியாட்களே இப்போது கம்பீரமாகப் பேசினார் கள். இடும்பன் சாமியையும், பிச்சாண்டியையும் பேசவிடாமல் பேசினார்கள். "யாருல ஒங்க ஆட்கள்... செய்யுறதயும் செய்துப்புட்டு... இன்னும் ஆள் சேக்கியாக்கும்..." "ஜாதிய பத்தி பேசுறிய... நம்ம ஜாதி நயினாரையே... ஒன்'சம்பந்தி வித்துட்டு வந்திருக்கான். அதை ஏன் கேக்க மாட்டக்க வாய் செத்துட்டா...? ஒன் வாய் அழுகாம சாகாது." ஆண்கள் மட்டும் பேசவில்லை. பெண்களும் பேசினார்கள். தெய்வானை, பரமசிவம் கண்முன்னால் விரலை விட்டு ஆட்டிக் கொண்டே முழங்கினாள்: "ஊருக்கு சொல்லுமாம்... பல்லி... காடிப்பானைக்குள்ள விழுமாம் துள்ளி... ஒன் ஜாதி ஏழைவள... எப்பவாவது உட்கார வச்சி பேசியிருக்கியா... இந்த கதிர்வேல் பிள்ளய எப்பவாவது நிக்கவச்சி பேசியிருக்கியா... இவன். சின்னான் கால் தூசிக்குப் பெறுவியா? நயினானையும் மூக்கனையும் வித்துட்டு முப்பழி செய்து முத்தத்துக்கு வந்த பயல விளக்குமாத்தால சாத்தணும். ஏய்... தங்கம்மா... சாணியக் கரச்சி கொண்டாடி... இவன் மூஞ்சில ஊத்தலாம்." நயினாரின் மகள், கூட்டத்தின் ஆவேசத்தை தொற்றிக் கொண்டவள் போல் பேசினாள்: "நம்மள கெடுக்கதே இந்த ஜாதிதான்... நம்ம ஜாதி மல்லிகாதான் போனவாரம் என்னைப் பார்த்து எச்சக்கல நாயேன்னாள். நாம எல்லாரும்... குட்டாம்பட்டில உலகம்மா மாதுரி... சேரியாட்களோட...