பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1 15 சேரணும். ஏய்யா சின்னத்துரை... எங்கய்யாவ... எவ்வளவுக்குப் பேசின? எவ்வளவுக்கு வித்த?" தங்கம்மாவின் அம்மா. இப்போது முன்னால் வந்தாள். தலையில் அடித்துக் கொண்டே வந்தாள். "என் புருஷன்... ஒங்களுக்கு செருப்பா உழச்சாரு. நில்லுங்ற இடத்துல நின்னாரு... உட்காருங்ற இடத்துல உக்காந்தாரு... அப்படிப் பட்ட மனுஷனையே... ஆஸ்பத்திரில அறுத்துப் போட்டுட்ட... அவரு பெத்த மவளுக்கு... நான் பேசுன மாப்பிள்ள அய்யா, ஒன்கிட்ட விசாரிச்சா... நான் பெத்த மவள... கள்ளப்பிள்ள கழிச்சதா, ஒன் தங்கச்சி சரோஜா சொல்லியிருக்கா. ஏய்யா பரமசிவம். இவ்வளவு செய்துபுட்டும் இன்னும் பேகறியாக்கும் பேச்சு... என்மவள் கல்யாணம் நின்னது மாதுரி... ஒன் மவள் கல்யாணம் நின்னா... எப்படிக் கலங்குவ?" இடும்பன்சாமி ஆதரவு சொன்னார்: "ஏன் சித்தி அழுவுற... நீயும் கையில வெண்ணெய வச்சிக்கிட்டு நெய்க்கி அலயப் படாது... சின்னான்... பிச்சாண்டி... இவங்கள மரத்துலவச்சி கட்டுனாங்க... ஆண்டிப்பயல நாயா அலக்கழிச்சாங்க... இந்த பச்ச மதல தங்கம்மாவ அரப் பைத்தியமாக்கிட்டாங்க... என்ன வேற சஸ்பெண்ட் பண்ணுறாங்க... இவங்கள... இப்படியே விடப்படாது... இப்போ பிணத்த வித்தாங்க... நாளைக்கி நம்மளயே... உயிரோட விப்பாங்க... கட்டுங்கடா... கயிற எங்கடா..." பரமசிவத்தின் பங்காளிகளில் ஒரு சில ஏழைகளுக்கு மனது கேட்கவில்லை. என்னதான் இருந்தாலும் இப்படியா பேசுறது... அதுவும் பால்பவுடர் வித்த இடும்பன்... "சரி... பைசல் பண்ணுங்க... பெரிய மனுஷங்கள ஒரேயடியா அவமானப் படுத்தப்படாது... அதுவும் சேரிக்காரங்க முன்னால..." சின்னான், அமைதியாகவே பேசினான்: "அளகேசன். நீரு... என்னை குத்திக் காட்டிட்டதா நினைச்சா... ஏமாந்து போயிட்டீர்னு அர்த்தம்... பணக்காரங்க ஒண்ணும் முடியாட்டா... ஜாதியயாவது... தொழிலயாவது கேவலமா காட்டிப் பேசுறது இயற்கை. நான் பேசுனதால... பறையன்னு சொன்னாங்க... இதையே நீரு சொல்லியிருந்தா பனையேறிப் பயலா இப்டி பேசுறது"ன்னு' சொல்லுவாங்க... குட்டாம்பட்டி பனையேறி மாயாண்டியோட வீட்டயே சமாதியா ஆக்குனவங்க பணக்காரங்க... அதனால கொஞ்சம் பாத்துப் பேகம். உலகம்மைன்னு ஒரு வீரப்பொண்ணு சேரில வந்து சேர்ந்திருக்காள் சாமி... நீரும் சேரனும்..." சண்முகக் கோனார், சமாதானம் சொன்னார்: "அவன் கிடக்கான் லூஸுப் பய... விட்டுத்தள்ளு சவத்துப் பயல..." கதிர்வேல் பிள்ளை குழைந்தார்: