பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் i23 "இன்ஸ்பெக்டர் ö有前..。 ஆண்டியப்பன் மேல... சார்ஜ்வrட் போட்டுட்டிங்களா?" "போடல... இன்னைக்குப் போடப் போறேன். நீங்க... சாட்சி சொல்ல வேண்டியதிருக்கும்..." "இன்ஸ்பெக்டர் சார்... விவகாரம் வெறும் லா அண்ட் ஆர்டர் இல்ல. கோர்ட்டுக்குப் போனால், எதுக்காக மிரட்டுனான்னு கேள்வி வரும். அந்தக் கேள்வியில, பசுமாடு வரும். கூட்டுறவுச் சங்க விவகாரம். பேப்பர்ல வரும். இப்போ நாறுற நாத்தம் போதாதா... அதனால. தயவு செய்து... எனக்காக... அவனை... அரட்டி மிரட்டி விட்டுடுங்க... பாழாப்போற இந்த வேலையிலே சேர்ந்தேன் பாருங்க... ஒங்க வேலை எவ்வளவோ தேவலை..." இன்ஸ்பெக்டர் தன் வேலை தேவலை என்பதை அங்கேயே நிரூபிப்பதுபோல் பேசினார்: "நீங்க நினைக்கது மாதிரி... விவகாரம் லைட்டா இல்ல... ஊர்ல போய்... மிஸ்டர் குமாரை கொலை பண்ணிட்டான்னு வச்சுக்குவோம். குமாரோட பெண்டாட்டி தாலியறுப்பாளோ என்னவோ... நான் தாலியறுக்க வேண்டியதிருக்கும். இது எக்ஸ்பிளாஸில் இஷ்ஷ... நீங்க தலையிடாமல் இருக்கது பெட்டர்..." "அய்யோ... நான் தலையிடாட்டால் என் தலை போயிடும் சார். தயவு செய்து நான் சொல்றதக் கேளுங்க... நாம ரெண்டு பேரும் கவர்மெண்ட் செர்வண்ட்ஸ். ஒருவருக்கொருவர் அட்ஜெஸ்ட் பண்ணாட்டால் எப்படி απή7" "எந்தெந்த பன்னிப் பயலுங்க கூட எல்லாம் அட்ஜெஸ்ட் பண்றேன். ஒங்க கூடவா பண்ணமாட்டேன். இது லீரியஸ் கேஸ். அதனாலதான்..." "கோர்ட்ல எல்லாம் அம்பலமாகும். நீங்க... பஸ் நிலையத்துல... அவன் கையைக் கட்டுனதும் வெளில வரும். ஏற்கெனவே... இவனோட ஆட்கள் என்கிட்ட வந்துட்டு எங்க எஸ்.பி.கிட்ட போயிருக்காங்க..." "இப்போ என்ன பண்ணலாமுன்னு சொல்றீங்க?" "அவனை விட்டுடுங்க." "சரி... அப்புறம்... ஒரு ஹவுஸிங் சொஸைட்டி அமைக்கலாமுன்னு நினைக்கோம். நாளைக்கு... ஒங்க ஆபீசிற்கு வரட்டுமா...?" "நோ... நோ... நானே வாரேன்..." விசாரனை அதிகாரி போய்விட்டார். அவரைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டரும், தனது ஜீப்பில் ஏறப் போனார் - எஸ்.பி.யிடம் போயிருக்கும் ஆட்களை நோட்டம் விடுவதற்காக. இதற்குள் ஒரு டெலிபோன் கால் வந்தது. இன்ஸ்பெக்டர், அலட்சியமாகப் போனை எடுத்துவிட்டு, முகம் அசிங்கமாகும்படி பேசினார்.