பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ஊருக்குள் ஒரு புரட்சி "சார். சார்... எஸ் சார் ஆண்டி சார். எஸ்டர் டேய் சார். பஸ் ஸ்டாண்ட்... சார். பிரிவண்டிவ் அரெஸ்ட் சார்... நோ சார். சார்... சார்... எக்ஸ்யூஸ் மீ சார்... எஸ் சார். எஸ் சார்!" பேயறைந்தவர் போல், இன்ஸ்பெக்டர் டெலிபோனை வைத்தார். கைக்குட்டையை எடுத்து, முகத்தைத் துடைத்துக் கொண்டார். பிறகு, ஆண்டியப்பனைப் பார்த்தார். எஸ்.பி.யிடம் பறிகொடுத்த ஆங்காரத்தில் பத்து சதவிகிதம் மீண்டும் வந்தது. "யோவ் ஆண்டி... ஒன்னை விட்டுடுறேன். இனிமேல் ஒழுங்கா இருப்பியா..." ஆண்டி அமைதியாகப் பதிலளித்தான்: "நீங்க விடவும் வேண்டாம்... நான் ஒழுங்கா... இருக்கவும் வேண்டாம்...." "இந்த மாதுரில்லாம் உளறப்படாது. நீ உண்டு... ஒன் வேல உண்டுன்னு இருக்கணும்.... இல்லன்னா பைண்ட் ஒவர்ல போட்டே மின்னால், வாரத்துக்கு நாலு தடவை கோணச்சத்திரத்தில் போய் போலீஸ் ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட வேண்டியதிருக்கும். இனிமேலாவது பக்குவமாகப் பேசி, பக்குவமா நடந்துக்கோ... சரி, திரும்பிப் பாராமல் gG." ஆண்டியப்பன். திரும்பிப் பாராமல் பேசினான். பக்குவமாகப் பேசியவரைப் பாராமல் பேசினான். "நான் இந்த நாட்டோட பிரஜை. வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருக்கு. நான் தெத்தல...திருடல. கள்ளச்சாராயம் காய்ச்சல... என்னை அப்படியிருந்தும் கையைக் கட்டிக் கொண்டுவந்திங்க... அடி அடின்னு அடிச்சிங்க... மிதி மிதின்னு மிதிச்சிங்க... நியாயத்த கேட்டவனுக்கு அநியாயத்த தந்திங்க... என்னை எதுக்காக அடிச்சிங்கன்னு தெரியுமுன்னால நான் நகரப் போவது இல்ல. தயவுசெய்து... நீங்க எதுக்கு எனக்கு தயவு செய்யனும்? என்னை கோர்ட்ல நிறுத்துங்க... பேச வேண்டியதை பேசிக்கிறேன்..." "அப்படின்னா நீ..." "போகச் சொன்னாலும் போகப் போறதாய் இல்ல..." இப்போதுதான், அவனும் மனிதன் என்பதுபோல் பார்த்த இன்ஸ் பெக்டர், அதிர்ந்து போனரர். உடம்பில் வீங்கியிருந்த இடங்களையும், கீறி யிருந்த பகுதிகளையும் ஊதிக்கொண்டே, எல்லாரையும், எல்லா வற்றையும் ஊதுகிறவன் போல், ஆண்டியப்பன் அமைதியாக, கால்களை விரித்துப் போட்டு, கைகளைப் பரப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் போகாததால், தானும் போக முடியாமல், இன்ஸ்பெக்டர் அங்கேயே இருந்தார். அவனை, தாஜா செய்தால், கான்ஸ்டபிள்களுக்கு இளக்காரம். அனுப்பி வைக்காமல் போனால், எஸ்.பி. தாளித்து விடுவார். στώτεστ Giartiuuu6υπιδ?