பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஊருக்குள் ஒரு புரட்சி அலைஞ்சேன். நேற்று ராத்திரி வரல... என் ராசாத்தி... மார்புல வலி தாங்க முடியலன்னு சொல்லிச் சொல்லி அழுதுது. அவளை நான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போறதாய் ஏற்பாடு. இதைத் தெரிஞ்சிக்கிட்டு அந்த மாசானம் நொறுங்குவான் வீண் புரளியக் கிளப்பிட்டான். இதனால என் ராசாத்தி போயிட்டாள். எம்மா என் ராசாத்தி.... இன்னா.... ஒன் அண்ணாச்சி வந்திருக்கார். ஒன்னை பார்வைக்குப் பார்வை பார்க்கிற, பேச்சுக்குப் பேச்சுப் பேசுற ஒன் செல்ல அண்ணாச்சி வந்திருக்கார் பாரும்மா... கண்ணைத் திறந்து பாரும்மா... ஒரு தடவையாவது பாரும்மா... என் ராசாத்தியே... என் தங்கமே... பார்க்க மாட்டியா... ஒன்னைத் தாய்க்குத் தாயா வளத்த அண்ணாச்சிய பாக்க மாட்டியாம்மா... பாருடி என் ராசாத்தி..." காத்தாயியின் புலம்பலால், எல்லாப் பெண்களும் கூப்பாடு போட்டார்கள். தங்கம்மா, என்ன செய்கிறோம் என்பது புரியாமலே ஆண்டியப்பனின் கழுத்தில் கை கோர்த்துக் கொண்டு அழுதாள். பிறகு அவன் தோளிலேயே மயங்கி விழுந்தாள். நான்கைந்து பெண்கள், அவளைத் தாங்கிப்பிடித்து, முந்தானைச் சேலைகளால் முகத்தில் வீசினார்கள். ஆண்டியப்பனுக்கு, யார் பேச்சும் கேட்கவில்லை. எந்த உருவமும் தெரியவில்லை. மூலையில் மூலையாய், கண் மூடித்துங்குபவள் போல், "வந்திட்டியா அண்ணாச்சி" என்று கேட்பதுபோல் உதடுகள் பிரிந்திருக்க, "சாப்பாடு போடுறேன்... வா" என்று சொல்லி எழுந்திருக்கப்போகிறவள் போல், வலது கை தரையில் ஊன்றப்பட்டிருப்பது போன்ற லாவகத் துடன், "எனக்கு நல்ல மருந்தா கிடச்சுட்டுது... இனிமேல் மார்புல வலிக்காது அண்ணாச்சி" என்று இடது கையை, உள்ளங்கை தெரியும்படி அபிநயமாய் காட்டுபவள் போல் தோன்றிய தங்கையையே வெறித்துப் பார்த்தான். அப்போதுதான் பிறந்த குழந்தை போலவும், படிப்படியாக வளர்வது தெரியாமல் வளர்ந்த சிறுமி போலவும், இளம் பெண் போலவும், தான் பார்த்த பல உருவங்கள் கொண்ட, தனது ஒரே ஒரு தங்கையைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு பாளை அரிவாள் இருக்கும் இடம் நினைவுக்கு வந்தது. கைகளை நெறித்துக் கொண்டு, கன்னக்கதுப்பின் உட்புறங் களைக் கடித்துக் கொண்டு, அவன் கரங்கள் துடித்தபோது இரண்டு போலீஸ்காரர்கள், கிராம முன்ப்ேபான மல்லிகாவின் தந்தையோடு உள்ளே வந்தார்கள். பழைய சப்-இன்ஸ்பெக்டர். "இது... தற்கொலை கேகன்னு... ரிப்போர்ட் வந்திருக்கு.... பிணத்த பரிசோதனை பண்ணனும். ஆஸ்பத்திரிக்கு தூக்குங்கய்யா..." என்று அதட்டினார். கிராம முன்சீப் கம்பீரமாகத் தலையாட்டினார். அவ்வளவுதான்!