பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 4 ஊருக்குள் ஒரு புரட்சி பேன். கிடைக்கிற கூலியில... தங்கச்சிக்கு மருந்து வாங்கியிருப்பேன்... இவள் செத்திருக்க மாட்டாள். இந்த மாட்டு விவகாரத்த... அதிகாரிங்க இழுத்தடிக்காம... ஒழுங்கா விசாரிச்சிருந்தால், நானும் இவளோட விவகாரத்த பாத்திருப்பேன். இவளும் செத்திருக்கமாட்டாள். என் தாய் மாமா மகள்மேல... இந்த முன்ஸிப்போட மகள் அபாண்டமா பழி சொல்லாமல் இருந்திருந்தால், என் மாமன் செத்திருக்க மாட்டாரு... இவள்... என் தங்கச்சிய கவனிச்சிருப்பாள்... அவளும் செத்திருக்க மாட்டாள்... - "சரி... இந்தக் காத்தாயி புருஷனை... போலீஸ் பிடிச்சிக்கிட்டுப் போனதா மாசானம் சொல்லாமல் இருந்திருந்தால்... இந்த உடன் பிறவா சகோதரி... என்னோட சகோதரிய... ஆஸ்பத்திரியில சேர்த்து பிழைக்க வச்சிருப்பாள்... சரி தொலையட்டும்... என்னையாவது... ஒங்க ஆட்கள் கையைக் கட்டி... போலீஸ் ஸ்டேஷன்ல வைக்காட்டால், நான் ஓடோடி வந்து... என்னோட உடன் பிறப்ப. காப்பாத்தி இருப்பேன்... செத்திருக்கமாட்டாள். அதனால.. இது கொலை. தற்கொலை இல்ல.... கர்னனை எல்லாருமாய்... கொஞ்சங் கொஞ்சமாய் கொன்னது மாதிரி என்னோட தங்கச்சிய... சர்க்கார் டாக்டருங்க, அதிகாரிங்க, என்னோட சுத்திக்கிட்டு இருந்த பயலுவ, அந்த மாசானம், இந்த முன்ப்ேபு இப்டி எல்லோருமாய் கொலை பண்ணிட்டாங்க... ஒங்களால... கேஸ் போட முடியுமா ஸார்..." சற்று நேரத்திற்கு முன்பு, தலையிலும், முகத்திலும் அடித்துக் கொண்ட தங்கம்மா... இப்போது, இன்னொரு அவதாரம் எடுத்தவள் போல் கர்ஜித்தாள்: "போலீஸ் எசமானுவளே... என் அத்தை மகன. ஒங்க ஆட்கள்... சர்க்கார் துணிமணியள போட்டுருக்கிற திமுறுல... அவங்களுக்குத்தான் கை காலு இருக்கது மாதிரி அடி அடின்னு அடிச்சி... மிதிமிதின்னு மிதிச்சிருக்காங்க... இன்னா பாருங்க... இந்த மனுஷனோட கையில காயத்த... உதடு கிழிஞ்சி இருக்கத பாருங்க... வலது கண்ணு வீங்கி இருக்கத பாருங்க... தனியா அகப்பட்டவர்னு அடிச்சிட்டாங்க... இப்போ, எங்க கையும் காலும் ஒங்க மேல பட்டால், எங்கள இப்போ கேக்கது யாரு? ஒங்களுக்கு இளநீர் வெட்டிக் குடுத்த பரமசிவம் வருவானா? இல்ல, ஒங்கள மிரட்டி பணியவச்ச குமாரு வருவானா? இப்போ, உங்க உயிரு. எங்க கையில... யாரு கையில: சொல்லுங்க எசமான் மாரே?" இப்போது கூட்டம், கும்பலாக மாறியது. எல்லோரும் எழுந்து, போலீஸ்காரர்களைப் பார்த்து, முண்டியடித்து முன்னேறினார்கள். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும், நிதானம் கலையாத ஒருசிலர் "பொறுங்கடா... பொறுங்கடா" என்று முரட்டுத்தனமாகப் போனவர்களை இழுத்துப் பிடிக்க, கூட்டத்தில் அகப்பட்ட குழந்தைகள் கூக்குரலிட,