பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 139 மைத்துனனைப் பார்த்து, தங்கையின் தாம்பத்ய வாழ்க்கையையும், ஏலாதவனைப் பெற்ற வல்லரக்கி மாமியாரையும் நினைவுக்குக் கொண்டு வந்த ஆண்டியப்பன், பைக்குள் கிடந்த கால்பவுன் தாலியை எடுத்து, மைத்துனனிடம் நீட்டி, "இந்தாரும்... இது ஒமக்குத் தேவையா இருக்கும்..." என்று சொல்லி நீட்டினான். மைத்துனன். அவன் சொன்னதன் பொருள் புரியாமலே, அந்தப் பொருளை வாங்கிக் கொண்டு, தான் பெற்ற பிள்ளையை அங்கேயே விட்டுவிட்டு, தயங்கித் தயங்கி சிதையைப் பார்த்துக்கொண்டே போய்த் தொலைந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த கூட்டம். இப்போது, மெளனத்தைக் கலைத்தது. "முந்தா நாள் வீட்டுக்குப் போயிருந்தப்போ... அண்ணாச்சின்னு ஆசயோட மீனாட்சி கூப்பிட்டாள்... இப்போ...? சும்மாவாச் சொன்னான்... 'தூங்கும்போது ஒரு மூச்சு... அது சுழி போட்டு இழுத்தாக் கால் போச்சு... இது தெரியாமல், துள்ளுறோம்... துடிக்கிறோம்..." என்றார் ஒரு கிழவர். - சின்னான், அவருக்குப் பதிலளித்தான்: "அது சரிதான் சாமி. மனிதன் சாகலாம். ஆனால் மனிதகுலம் சாவதில்லை... அந்தக் குலத்துக்காக... நாம சாகும் முன்னால. ஏதாவது நல்லது செய்யாம... இப்டி மூச்சைப் பிடிச்சுக்கிட்டு மூச்சப் பற்றிப் பாடினால் தப்பில்லியா..." ஆண்டியப்பன், ஆதங்கத்தோடு பேசினான்: "நீ இவ்வளவு பேசுறியே சின்னான்... நீ கூடத்தான் தப்புப் பண்ணிட்டே..." "என்ன பண்ணுனேன்?" "ஊர் ஜனங்கள் எல்லாம் ஒண்ணா திரண்டு... முன்னnப்பையும், போலீஸ்காரங்களையும் அடிக்கப் போனபோது... நீதடுத்திட்டே... ரெண்டு செறுக்கி மவனயாவது வெட்டிப் போட்டுருக்கணும்... சரி போவட்டும். என் கையால ஒரு கொலையாவது விழாமப் போவாது..." "இந்தா பாரு ஆண்டி.... நீ சொல்லிட்ட... நான் சொல்லல. அவ்வளவுதான் வித்தியாசம்... ஆண்டி... உனக்கு ஞாபகம் இருக்கா? நாம் எட்டாவது வகுப்புப் படிக்கும்போது, திருவோடு வாத்தியார் பிரெஞ்ச் புரட்சியைப் பற்றிச் சொல்லும்போது. கில்லடின் என்கிற ஆயுதத்தால எதிரிகளைக் கொன்னதாச் சொன்னாரு... உடனே நான் கில்லடின்னு எதுக்காகப் பெயர் வந்துதுன்னு கேட்டேன். வாத்தியார், ஆடு திருடுன திருடன் மாதுரி விழிச்சாரு... உடனே நான் கில் பண்ணுனதால கில்லடின்னு பேர் வந்ததாச் சொன்னேன்... உடனே நீ கில்டியா இருக்கவங்கள கொல்ற மிஷின்... அதனால கில்லடின்னு பேர் வந்திருக்குமுன்னு சொன்னே... ஞாபகம் இருக்கா சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் ஆகிய லட்சியங்களுக்காகத் துவங்கிய