பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 145 தவில் மேளத்தை தாளத்தோடு அடிக்க, அந்தத் தாளத்திற்கு ஏற்றாற்போல், ஒரு எட்டு வயதுச் சின்னப் பயல் சிங்கி போட்டான். முன்னொரு நாள் அரசாங்க விழாவில் அமைச்சர் கொடுப்பதாக இருந்த சீருடைகளை வாங்க முடியாமல்போன ஹரிஜனச் சிறுவர்களும், சிறுமிகளும் சின்னான் வாங்கிக் கொடுத்திருந்த புத்தாடைகளை அணிந்தவர்களாய், அவன் எழுதிக்கொடுத்த ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண் டிருந்தார்கள். ஊரிலிருந்து, ஒருவர் ஒருவராக, இருவர் இருவராக வந்து கொண்டிருந்தார்கள். சாமக்கோழி கூவப்போகிற நேரம். துருவ நட்சத்திரம் சுடர்விடும் காலம். பிச்சாண்டி, சஸ்பெண்டான ஒரு ஆசிரியர், முனியாண்டி முதலியோர் மொத்தமாக வந்தார்கள். ஆண்டியப்பனும், தங்கம்மாவும், ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி வந்தார்கள். அவர்கள் வந்த ஐந்து நிமிடத்திற்குள், கோபாலும், அவன் தந்தை, தங்கைகளும் வந்தார்கள். அரைமணி நேரத்திற்குள் கிணறு வெட்டப் போய் காலொடிந்து காண்டிராக்டரால் கைவிடப்பட்ட லோகன், பள்ளிக்கூட சர்ட்டிபிகேட்டு மறுக்கப்பட்டு டவுனில் சர்க்கார் கழுதையை மேய்க்க முடியாமல், எருமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் மகனைப் பெற்ற மாடசாமி, சாலையோர சர்க்கார் மரத்தை வெட்டும்படி தூண்டி விடப்பட்டு, பின்னர் கையுங் களவுமாகப் பிடிபட்டபோது மர வியாபாரியால் கைவிடப்பட்டு, கை விலங்குபட்ட காத்தவராயன், தட்டாசாரி தங்கச்சாமியிடம் மூதேவி என்று அடிக்கடி அர்ச்சிக்கப்பட்ட ஆசாரிப் பையன் ஆறுமுகம், பண்ணையார்கள் வயலில் கிடை போட்டும், வயிற்றுக்கு விடைகாணாத சண்முகக்கோனார். நாவிதர், சலவையாளர் முதலியவர்கள் ஓடிவந்தார்கள். காத்தாயியின் இடுப்பில் இருந்த மீனாட்சியின் குழந்தையை, தங்கம்மா வாங்கியபோது, "இந்த மேளச் சத்தத்துலயே... ஆண்டி அண்ணாச்சிய, ஒனக்குத் தாலி கட்டச் சொல்லட்டுமா..." என்றாள் காத்தாயி, தங்கம்மா. நாணவில்லை. பெண்மையால் பசலை நிறம் படரவில்லை. காத்தாயியை கூர்ந்து பார்த்துக் கொண்டே "நான் இப்போ இந்த ஊரு திரியோதனாதிபதிகள முடிக்க வந்திருக்கிற திரெளபதி..." என்றாள். கோவில் ஒன்றில் முன்பு நடந்த ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டே. இதற்குள். இன்னும் பலர் கூடிவிட்டார்கள். சின்னானால், ஒரளவு குடும்பச் சுமையை குறைத்துக் கொண்ட சேரி விதவை மூக்கையாவின் மனைவியும், ஜாதி விதவை நயினாரம்மாவும், இன்னும் பல ஏழையாளைகளும் அங்கே ஒடோடி வந்தார்கள். சேரிக் குடிசைகள் கம்பீசப் பட்டவைபோல், காற்றில் சிலிர்த்தன. வாதமடக்கி மரங்களும், பூவரசு கிளைகளும், ஒன்றுடன் ஒன்று மோதி கர்ஜித்தன. கல்லாய் இருந்த முனரீஸ்வரர் உயிர் பெற்று, மனித அவதாரங்களாய் மாறியது போலவும், சேரி ஜனங்களும் சாதி ஜனங்களும் ஜாதியைத் தொலைத்துவிட்டு. ஏதோ 25rs. Io.