பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஊருக்குள் ஒரு புரட்சி ஒன்றைக் கண்டுபிடிப்பது போலவும், ஒருவரை ஒருவர் புதிதாகப் பார்ப்பவர்கள் போலவும், இதுவரைக்கும் அப்படிப் பார்க்காமல் போனதற்குப் பிராயச்சித்தம் தேடுபவர்கள் போலவும், ஒருவர் தோளில் இன்னொருவர் கை போட, முனிஸ்வரனின் திரிசூலத்தை, போர்க்கோலம் பூண்டவர்கள் போல் பார்த்தார்கள். கிழிந்த வேட்டிகளிலும், மக்கிப்போன சேலைகளிலும், ஒட்டிய வயிறுகளிலும், ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. மானம். தன்மானம்... அஞ்சி அஞ்சிச் சாக விரும்பாத செறுக்கு... செத்து வாழ்வதைவிட, வாழ்ந்து சாக நினைக்கும் வைராக்கியம்... யாரும், யாருடனும் அதிகமாகப் பேசவில்லை. வாயின் வேலைகளை கண்கள் எடுத்துக் கொண்டன. முனரீஸ்வரனுக்கு, கர்ப்பூரம் கொளுத்தாமலே அநீதிகளைக் கொளுத்தி, அக்கிரமங்களை உடைக்கப் போகிற மனிதாபிமான பகதிப் பரவசம்... ஆண்டியப்பன், கூட்டத்தைப் பார்த்தான். மீனாட்சி இறக்கவில்லை. இருக்கும்வரை வாழாமல் போனவள், இறந்த பிறகு வாழ்கிறாள். அக்கிரமங்களைக் களைய வேண்டும் என்ற இதயங்களின் நாடித்துடிப்பாக, அதற்காக எதையும் செய்யத் தயாரான கரங்களில் எஃகாக, வாழ்கிறாள். ஒரு தங்கையை விட்டுக்கொடுத்து பல தங்கைகளை சம்பாதித்தவன்போல், ஒரு தாய்மாமனைப் பலிகொடுத்து, பல 'அம்மான்களை பெற்றுக்கொண்டவன் போல், ஆண்டி கூட்டத்தைப் பார்த்தான். தனி மனிதனாக நின்று. சமுதாயமாக மாறிய அவனை. சமுதாயமாக நின்ற கூட்டம், தனி மனிதனாக உருமாற்றம் ஆனது போல், அவனை ஒருசேரப் பாாத்தது. ஆடவர்கள், வரிசை வரிசையாக நின்றார்கள். அனைவரும் வுேட்டிகளைத் தார்பாய்த்து, தோள் துண்டுகளைத் தலையில் கிரீடமாகக் கட்டிய மதுரை வீரன்கள் போல் மார்பை நிமிர்த்தி நின்றார்கள். அந்த மார்புகள் இதயங்களுக்குக் கவசம்போல நிமிர்ந்து நின்றன.'சின்னப்பய மவனுள பாரேன் என்பது மாதிரி பார்த்துக் கொண்டிருந்த சில சேரிக் கிழவர்கள், குளிருக்காய் மூடிய போர்வைகளை வீசியெறிந்தார்கள். சின்னான் ஆணித்தரமாகவும், அமைதியாகவும் பேசினான்: "இன்றையில இருந்து, நமக்கு நலல காலம். சேரிக் குடிசைகளும், ஜாதிக் குடிசைகளும் ஒண்ணாயிட்டு. இனிமேல் நாம் நடத்தப்போற உரிமைப் போராட்டத்திற்கு யாரும், வகுப்புவாத பாடை போர்த்த முடியாது" என்றான். அவன் சொலலி முடித்ததும், ஆண்டியப்பன், "கர்ணத்த கானுமே" என்றான். அந்தப் பக்கமாக அதிகாலையில் வாக்கிங் போகும் கர்ணத்தை. குண்டுக் கட்டாகக் கட்டிக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சின்னான். கர்ணம் கடத்தப்பட்டு வருவதைக் கவனிப்பதற்காக வெளியே போகப்போன போது, ஊர் கர்ணத்தை, நான்குபேர் தூக்கிக் கொண்டு வந்து, சின்னானின் முன்னால்