பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 147 நிறுத்தினார்கள். சின்னான், தூக்கிக் கொண்டு வந்தவர்களைக் கடிந்தான்: "ஏண்டா... பெரிய மனுஷன வலுக்கட்டாயமா கொண்டு வாறிங்க...? கூப்பிட்டால் தானா வருவாரே...' "நாங்க பயந்து கூப்பிட்டோம். அப்புறம் நயந்து கூப்பிட்டோம். அவர் மாட்டேன்னார். அப்புறந்தான்..." என்று தன் வயிற்றில் கர்ணத்தின் முதுகை வைத்திருந்தவன், மூச்சிரைக்கச் சொன்னான். கர்ணத்தைப் பார்த்துவிட்டு, அனிச்சையாக, தலையில் கட்டிய துண்டை எடுக்கப்போனவர்கள், அவரை, பிறகு துண்டு போடுவதுபோல், பார்த்தார்கள். பரம்பரைப் பழக்கத்தால் எழப்போன ஒரு கிழவர், கால்மேல் கால்போட்டு, கம்பீரமாக உட்கார்ந்தார். கர்ணம். உடலெல்லாம் ஆட, பேசமுடியாமல் ஆட்டுக்குட்டி மாதிரி நின்றார். எதுவுமே புரியாதது போல், கண்களைக் கசக்கிக் கொண்டு, பின்பு எலலாம் புரிந்தவர் போல், கூட்டத்தைப் பார்த்தார். சின்னான், அவரை ஆற்றுவித்தான். - "ஒம்ம போல எங்களுக்குக் கோபமில்ல... ஒம்முடைய நிலைமையில் நான் இருந்தாலும். இப்படித்தான் நடப்பேன். போவட்டும். சர்வே நம்பர... சமஸ்கிருத மந்திரம் மாதுரி ரகசியமாய் வச்சது போதும். யார் யாா, யார் யார் பேர்ல, எந்தெந்த நிலத்த, பினாமியாய் எழுதி வச்சிருக்காங்க என்கிறத சொல்லிடும். ஒம்மைவிட்டுடுறோம். இதுல நீரு வெட்கப்படுறதுக்கு அவசியமில்ல... ஒம்ம... அவமானப் படுத்துறதும் எங்க நோக்கமில்ல. அதோட நீரு பெரிய மனுஷன்... நீரு ஏழைகள் நிலத்துல... வில்லங்கம் பண்ணுனது மாதுரி... நாங்க ஒம்ம உடம்புல வில்லங்கம் பண்ண மாட்டோம். பயப்படாம விவரமாச் சொல்லும்..." சின்னானின் சினேகித பாவமான பேச்சு, கர்ணத்திற்குக் கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. தன்னைக் கண்டதும், துண்டை எடுத்து இடுப்பில் கட்டும் துண்டுப் பயல்கள் கூட இப்போது தார்பாய்த்து நிற்பதால அதிர்ந்து போனாலும், அவர் சாமர்த்தியமாகப் பேசினார். "அடங்கல் பட்டாவை பார்த்தாத்தான் விவரம் புரியும். போய் எடுத்துக்கிட்டு வரட்டுமா...? ஒரு நொடியில் வந்துடுறேன்." கர்ண குழைந்தபோது, சின்னான் சிரித்துக் கொண்டே குழைந்து பேசினான. "ஒம்ம மேல எப்படி தனிப்பட்ட விரோதம் கிடையாதோ... அப்படி தனிப்பட்ட பாசமும் கிடையாது. ஒம்மை குரோதம் இல்லாமலே குத்தப் போறோம். முன்விரோதம் இல்லாமலே மூஞ்சியக் கிழிக்கப் போறோம். யாருகிட்ட கரடி விடுறீர்? தூக்கத்துல எழுப்பிக் கேட்டால் கூட, சர்வே நம்பரை சொல்றவரு நீரு... நீரு சொல்லித்தான் பட்டா நிலத்த... பண்ணையாருங்க பினாமியாக்கியிருக்காங்க... சொல்றீரா. இல்ல திருவு திருவுன்னு திருவட்டுமா?"