பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 49 இல்லன்னா மல்லிகா. ஒன் மகள் மேலயும் பழிபோடுவாள்..." மீசைக்காரன், சந்தோஷமாகச் சேர்ந்து கொண்டான். சின்னான், கூட்டத்தை உற்சாகப் படுத்தினான். "நான் என் வேலையை ராஜினாமாப் பண்ணிட்டேன். இனிமேல், வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உங்களோடயே இருப்பேன். இப்போ நாம ஊருக்குள் புகுந்து... நம்ம பேர்ல. இருக்கிற பொருட்களைக் கைப்பற்றப் போறோம். சட்டப்படி நமககுச் சொந்தமான நிலத்துல உழப் போறோம். ஆனால், யாரையும் நாம் அவம்ானப்படுத்தப் படாது. சட்டுப்புட்டுன்னு காரியத்த முடிச்சிடணும்... நாலு மூலையிலயும். அவங்க போலீஸுக்குப் போகாதபடி ஆட்களை நிறுத்தியிருக்கேன். இருந்தாலும் சீக்கிரமாய் முடிக்கனும், புறப்படுவோமா? மச்சான்! நீரு மேளத்த அடியும்... டேய் பயலுவளா... நான் எழுதிக் கொடுத்த பாட்டைப் பாடுங்கடா..." கூட்டத்தினருக்கு முன்னால், முத்துக்கருப்பனின் மேளத்திற்கு ஏற்ப சிறுவர் சிறுமியர் பாடினார்கள். சின்னான், முனரீஸ்வரரிடம் இருந்த திரிசூலத்தை எடுத்து. ஆண்டியப்பனிடம் கொடுத்தான். ஆலமரத்தோடு சேர்த்துக் கட்டி வைக்கப்பட்டிருந்த கூர்மையான பித்தளை வேலை எடுத்து, பிச்சாண்டியிடம் கொடுத்தான். சிறுவர் சிறுமியர் தாள் நயத்தோடு பாடினார்கள்: புதிய ஜாதி புதிய ஜாதி புதிய ஜாதி பிறக்குது புன்மை கொன்று நன்மை ஆக்க புதிய ஜாதி பிறக்குது: பள்ளர் ஜாதி செத்தது; பறையர் ஜாதி செத்தது. கள்ளர் ஜாதி செத்தது: பிள்ளை ஜாதி செத்தது. குறவர் ஜாதி செத்தது; குடும்பர் ஜாதி செத்தது. ரெட்டி ஜாதி செத்தது; செட்டி ஜாதி செத்தது. சர்வஜாதி செத்துமே சமதர்ம ஜாதி பிறக்குது: (புதிய) நாட்டார் ஜாதி செத்தது; நாடார் ஜாதி செத்தது. நாயுடு ஜாதி செத்தது; நாய்க்கர் ஜாதி செத்தது. கவுண்ட ஜாதி செத்தது, கெளட ஜாதி செத்தது. பலஜாதி செத்துமே பாட்டாளி ஜாதி பிறக்குது! பாட்டாளி ஜாதி பிறக்குது! (புதிய) அணி வகுப்பை அறியாதவர்கள் கூட அணிவகுத்துச் சென்றார்கள். ஊர்வலம் போலவும், தீவட்டிக் கொள்ளை போலவும், ஊருக்குள் ஐம்பது பேராக நுழைந்த கூட்டத்தில், இப்போது பலர், சொல்லாமலே சேர்ந்தார்கள். யாரும் கேளாமலே அந்தப் பாட்டைப் பாடினார்கள். கூட்டத்திற்கு முன்னால், ஆண்டியப்பனும், சின்னானும் கம்பீரமாகப் போனார்கள். காத்தாயியும், தங்கம்மாவும், அதற்கு அடுத்தாற்போல் போனார்கள். ஏதோ ஒன்றை அடையாளம் கண்டுகொண்ட திருப்தியில்,