பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ஊருக்குள் ஒரு புரட்சி பல மதில்மேல் பூனைகள் கூட்டத்தையே ஒரு மதிலாக நினைத்து, அரண்போல் ஆனார்கள். ஊரில் உள்ள பெரும்பாலான ஏழை மக்கள் - ஆறடி உடம்பை 'நான்கடிக்குள் கூனிக்குறுக்கி நடமாடி வந்த அந்த குற்றேவல்காரர்கள், இப்போது, ஒரு பனையை விட உயரமான நீளத்தில் உடம்பும், ஆறடி அகலத்தில் மார்புங் கொண்ட இதுவரை பார்த்தறியாத ஒரே ஒரு அசுர மனிதனைப்போல், தோன்றினார்கள். ஒட்டுப்போட்ட ரவிக்கைகளும், கிழிந்த சேலைகளும். இத்துப்போன வேட்டிகளும், அற்றுப்போன துண்டுகளும், அந்த அசுர மனிதனின் ஆடைகளாக, பழைய ஜாதிகளைச் சாடிய புதிய பாடல், அந்த மனிதனின் ஆன்மீகக் குரலாக, ஆணென்றோ. பெண்ணென்றோ இல்லாமலும், அந்த இயல்புகள் அல்லாமலும் தோன்றிய அந்த அர்த்தநாரீஸ்வரத்தின் ஒவ்வொரு அடியும் பேரடியாக, ஒவ்வொரு வார்த்தையும் புதியதோர் பிரும்மோபதேசமாக, ஊரின் ஒவ்வொரு உறுப்பும் கதிகலங்கி, பின்னர் கதி கண்டதுபோல் எதிரொலியாய் ஒலித்தது. 21 பழைய ஊர்ச் சாவடிக் கட்டிடத்திற்கு அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு முன்னால் கூட்டம் போய் நின்றது. கூட்டுறவுச் சங்கக் கட்டிடம் அது. சத்தத்தைக் கேட்டு உள்ளே துங்கிக்கொண்டிருந்த கூட்டுறவுத் தலைவர். தற்செயலாகக் கதவைத் திறந்தார். ஏதோ கிறிஸ்தவர்கள், பாடிக்கொண்டு போவதாக நினைத்த தலைவர், ஆண்டியப்பனைப் பார்த்துவிட்டு, அந்தப் பயத்திலேயே அவனை அடுத்து நிற்பவர்களைப் பார்க்க விரும்பாமல், கதவைச் சாத்தப் போனார். கதவின் ஒரு பகுதியை மூடிவிட்டு, இன்னொரு பகுதியை மூடப்போன போது, பிச்சாண்டி, அவரையும், அந்தக் கதவையும் ஒருசேர இழுத்தான். "விட்டுடுப்பா... வாரேன்" என்று தலைவர் கத்த, பிச்சாண்டியின் இரும்புப்பிடி, வெண்ணெய்ப் பிடியாக, தலைவர் வெளியே வந்து இரண்டு கைகளையும் துக்கி தலைக்குமேல் கொண்டுபோய் வைத்துக் கொண்டு, "நீங்க என்ன சொன்னாலும் கேக்கேன்... எல்லாப் பயலுமாச் சேர்ந்து என்னையும் மோசம் பண்ணிட்டானுவ... நீங்க என்ன செய்தாலும், எனக்குச் சந்தோஷந்தான்" என்றார் அழுதுகொண்டே. சின்னான் அதட்டினான்: "இப்போ... அழுவுறீர். அப்போ இந்த ஆண்டி அழுதான். அவன் தங்கச்சி... அழமுடியாத இடத்துக்குப் போயிட்டா... ஒரு வார்த்த. பரமசிவத்த தட்டிக்கேட்டிரா... அநியாயத்த தட்டிக் கேக்காதவன் முதுகயும் தட்டிப் பார்க்கிற காலம் வந்துகிட்டு இருக்குய்யா... கூட்டுறவ... குடும்ப உறவா ஆக்கின ஒம்ம... இப்போ என்ன செய்யப் போறோம் தெரியுமா?"