பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1 5 i "சபையில... நான் தோப்புக்கரணம் வேணுமுன்னாலும் போடுறேன். என்ன சொன்னாலும் செய்யுறேன். நானே... ஒங்ககிட்டே வரப்போற சமயத்துல நீங்க என்கிட்ட வந்திருக்கிங்க..." "யோவ். இது சபை... கூட்டுறவுச் சங்கமில்ல... இந்தத் தளுக்குப் பேச்சில்லாம் வேண்டாம்." "என்ன செய்யனும் சொல்லுங்க..." "சரி... பேரேட்ட எடும். எத்தன பேரு வீட்ல. எத்தன பேரு பேர்ல எத்தன மாடு இருக்கு, விவசாயக் கருவி இருக்குன்னுச் சொல்லணும். பேரேட்ட எடுத்துக்கிட்டு வாரும். உ.ம்... சீக்கிரம்..." கூட்டு(றவு)த் தலைவர், பைண்ட் செய்த ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தார். ஆண்டியப்பன் அதட்டினான்: "கதவப் பூட்டிட்டு வாரும்வே... இல்லன்னா... குமார் பய... சங்கத்த கொள்ளையடிச்சிட்டு. பழிய எங்க மேல போடுவான்..." சின்னானுக்கு, திடீரென்று ஒரு யோசனை: "கேஷ் புக்கை கொண்டு வாரும்..." தலைவர் உள்ளே போய், கேஷ் புக்கைக் கொண்டு வந்தார். அதன் அட்டை, பழைய காலனா நாணயம் போல், மங்கியிருந்தது. சின்னான், அவரது கைகளிலேயே அந்த நோட்டு இருக்கும்படி பிரித்துக் கொண்டு. "கேஷ் பாலன்ஸ் ஆயிரம் ரூபாய் பதினைஞ்சி காசு இருக்கணும். இருக்கா..." என்றான். "அது வந்து..." "நாங்க திருட்டுக் கூட்டம் இல்லய்யா... பணத்தத் தொடமாட்டோம்... பேலன்ஸ் பணம் இருக்கான்னு செக் பண்றதுக்காகத்தான் கேக்கேன்..." "அது வநது. ஒரு அவசரமுன்னு. மாசானம் ராத்திரி ஐநூறு கேட்டான்..." "மீதி ஐநூறு ரூபாய் பதினைஞ்சி காக?..." "குமாா... அவசரமுன்னு..." "ஏய்யா... கூட்டுறவுன்னா என்னென்னு தெரியுமாய்யா? ஊரே ஒரு குடும்பமாய் இருந்து எல்லாத் தொழிலையும் செய்யுறதுக்காக அமைக்கப்பட்ட லட்சியம் கூட்டுறவு, காக்கா கூட ஒண்ணாச் சாப்புடுது... மனுஷனும் ஒண்ணா உழைத்து ஒண்ணாச் சாப்பிடக் கூடாதா என்கிற கேள்விக்கு விடைதாய்யா கூட்டுறவு... காக்காவப் பார்த்து கத்துச்டுெறதுக்குப் பதிலா காக்கா பிடிக்கதுக்கு கூட்டுறவுச் சங்கத்த பயன் படுத்தலாமாய்யா..." கோபால், ஒரு காலை தரையில் தேய்த்துக் கொண்டே கத்தினான்: "புதுசா இவன் கட்டுன வீட்டுல கூட்டுறவுப் பணம் எவ்வளவு போயிருக்குன்னு கேளு சின்னான். இவன அடிச்சாத்தான் உள்ளத சொல்லுவான்."