பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் I 57 இதைப் புரியாட்டால்... நம்ம தலையில நாமளே மண்ணை வாரிப் போட்டதா அர்த்தம். கதவைத் திற... உன் உயிருக்கு நான் உத்தரவாதம்" என்றார். கதவு திறக்கப்பட்டது. பல தலைகள் தெளிவில்லாமல் தெரிந்தன. முந்திய இரவு, ஏதோ அரிசிக் கூட்டம் போடுவதற்காகக் கூடியிருந்த குமார், மாணிக்கம், மல்லிகா, சரோஜா அம்மையார் ஆகியோர் தலைகளும் இதர ஆசாமிகளின் தலைகளும், தூரத்துப் பார்வைக்குச் சின்னச் சின்ன தேங்காய்கள் மாதிரி தெரிந்தன. இதுவரை, பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்த ஆண்டியப் பன் இப்போது கர்ஜித்தான். ஆறு மாதமாக அடக்கி வைத்திருந்த கோபம், கரையைப் பிய்தெறியும் காட்டு வெள்ளம்போல் சுழிபோட்டது. "ஏய்... மானங்கெட்ட குமார். அடுத்துக் கெடுக்கிற மாணிக்கம்... நீங்க ஒரு அப்பனுக்குப் பிறந்தவங்கன்னா. கீழ இறங்குங்கல. இப்போ... எந்த போலீஸ் வருதுன்னு பார்ப்போம். திருநெல்வேலியில... என் கையக்கால கட்டிக்கொண்டு போவ வச்ச எச்சிக்கல பயலுவளா... ஒங்க கையக் கால இப்போ கட்டிப் பாக்கட்டுமாடா... கீழ இறங்குங்கல. பரமசிவம்... இன்னுமா என் மாட்டை தராம நிக்கிற?..." சின்னான், ஆண்டியின் தோளை அழுந்தப் பற்றிக் கொண்டே, "பழைய தலைவரே... நேரத்த கடத்துனால்... மானம்... மரியாதி எல்லாம் கடந்து போயிரும். ஆண்டி கேக்குறது காதுல விழலியா..." என்றான். கூட்டுறவுத் தலைவர் "பரமசிவம்... சீக்கிரமா வாப்பா... ஒன் உடம்புல ஒரு தூசிகூட படாது..." என்ற போது, காத்தாயி "ஏன்னா... நாங்க தூசிய அடிக்க மாட்டோம்" என்று தலைவர் கோடிடாத இடத்தைப் பூர்த்தி செய்தாள். ஏதோ ஒரு சக்திக்கு உட்பட்டவர்போல், பரமசிவம் கீழே இறங்குவதற்கு காலைத் தூக்கியபோது, அவரது மனைவி "பே மனுஷன்... பேத்தனமா செய்தத... காலால உதறிப் போட்டுடுங்க... எனக்குத் தாலிப்பிச்சை கொடுங்க... தாலிப்பிச்சை கொடுங்க" என்று அழுதபோது, ஊர் மக்களை, எப்போதும் அகம்பாவமாகப் பேசும், அவளையும் கூட்டம் அனுதாபத்தோடு பார்த்தது. உடனே சின்னானும் "நீங்க நினைக்கது மாதுரி நாங்க நடக்க மாட்டோம்... அழாதிங்கம்மா..." என்றபோது, பரமசிவம் மடமடவென்று கீழே இறங்கினார். மீசைக்காரன், மடமடவென்று மேலே ஏறினான். மீசைக்காரன், தழைமிதிக் கருவி, நெற்குதிர்கள் போன்ற பொருட்களை மேலே இருந்தே கொண்டு வந்து போட்டபோது, பரமசிவம், ஆண்டியப்பனின் மாட்டை, கன்றோடு கொண்டு வந்து, அவற்றின் கயிறுகளை அவனிடம் நீட்டினார். அந்த ஜெர்ஸி கலப்பினப் பசு, ஆண்டியப்பனை, தன் கன்றுக்குட்டி மாதிரி நினைத்து, அவன் கையை நாக்கால் தடவியது. கன்றுக்குட்டியோ. அவனை முதலில் பார்த்து சிறிது மிரண்டு விட்டு, பின்னர் அவனைப் பார்த்து "ம்மா... ம்மா...' என்றது.