பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 58 ஊருக்குள் ஒரு புரட்சி தங்கம்மாவுக்கும், ஆண்டியப்பனின் ஆவேசம் தொத்திக்கொண்டது. கதவருகில் நின்ற மல்லிகாவைப் பார்த்துக்கொண்டே. கனல்கக்க முழங்கினாள்: "அடியே மல்லிகா... அப்போ சொன்னது ஞாபகம் இருக்காடி... என் அத்த மகனை என்ன பேச்சுப் பேசின? என் அய்யாவ எப்டிக் கொன்னுட்ட பழிகாரமுண்ட... மரியாதியா... ஒன் மாமன்கிட்ட இருக்கிற மாட்டுக் கயிற்ற... என்கிட்ட வாங்கிக் கொடுடி... கொடுக்கியா இல்ல... மாட்டு வாலுல ஒன் கொண்டய கட்டணுமா... இப்பவாவது புரிஞ்சிக்கடி... சின்னான் அண்ணன் சொன்னது மாதுரி ஏழைங்க நெருப்புக் குச்சி.டி... உரசிட்டா விடாது.டி. சரி... மாட்டி வாங்கி என்கிட்ட கொடுடி... நீ இங்க வாரியா... இல்ல நான் அங்க வரட்டுமா... அடியே... மாசானம் வைப்பாட்டி சரோஜா.... நான் கள்ளப்பிள்ள பெத்ததாச் சொன்னே... ஒன் கள்ள மவள... இங்க வந்து மாட்ட கொடுக்கச் சொல்லுடி... இல்ல..." குமாரும், மாணிக்கமும் பேயறைந்தவர்கள் போல, பேயை அறைந்தவள் போல் நின்ற தங்கம்மாவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, பிறகு தலைகளை அதைரியமாகக் கீழே கொண்டு போனபோது, காத்தாயி "மல்லி... வா ராசாத்தி... வந்து, மாட்ட நீ கொன்ன கிழவர் மகள்கிட்ட கொடு புண்ணியவதி" என்றாள். மல்லிகா தயங்கித் தயங்கி, ஒரு படியில் இறங்கி, இன்னொரு படியில் காலை இறக்கப் போனபோது, தங்கம்மா "அங்கேயே நில்லுடி. சவத்து முண்ட. ஒன்கிட்ட ஜெயிச்சு எனக்கு என்னடி ஆக வேண்டியதிருக்கு" என்றாள் அமைதியாக, மல்லிகா, எம் புக் ஒவர்லியர் மாதிரி. நின்ற இடத்திலேயே நின்றபோது, கூட்டத்தை ஒரு குரல் உலுக்கியது. பலசரக்கு சீமைச்சாமி, இரண்டு மூட்டைகளைக் கொண்டு வந்து போட்டுவிட்டு, கூட்டத்தின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டார். அந்த மூட்டைகளில் லிவில் ஸப்ளை கார்ப்பரேஷன்" என்ற முத்திரை இருந்தது. சீமைச்சாமி, கீழே இருந்து எழாமலே கெஞ்சினார்: "தர்மப் பிரபுக்களே... என்னை மன்னிச்சேன்னு சொல்லணும். இந்த பரமசிவம்... இந்த அரிசி மூட்டையுவள.. என் கடையில வச்சிருக்கச் சொன்னாரு... இது சர்க்காரோட அரிசி மூட்டைன்னு தெரிஞ்சும் தெரியாம வாங்கிட்டேன்..." சின்னான், கோபத்தோடு பேசினான்: "புட் பார் ஒர்க்... அதாவது... ஏழைபாளைகளுக்கு வேலைக்கேத்த உணவாய் கொடுக்கதுக்காக... அரசாங்கம் நம்பிக் கொடுத்த அரிசி மூட்டைங்க... அட பாவி... முத்தி ரையை கலைக்காமக்கூட... அவசரத்துல வித்துருக்கியே... நீயில்லாம் பஞ் சாயத்துத் தலைவரா...பலசரக்கு எசமான்... இது நியாயமா... அய்யா... ஆயிரம் மக்களின் நாயகமே... பரமசிவம் மவராசா... பதில் சொல்லும்..." பரமசிவம், தலையை தாழ்த்திக் கொண்டபோது, பலசரக்கு "நான் தான் கொடுத்தேன்... சீமைச்சாமி ஒரு பாவமும் அறியாதவன்னு சொல்லும்வே" என்று தாழ்த்திய தலை மீண்டும் தாழும்படி அதட்டியது.