பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ஊருக்குள் ஒரு புரட்சி ஒவ்வொருவரும் இந்தக் கூட்டத்துக்குக் கண்கள், காதுகள் என்றும், நம் ஒவ்வொருவருக்கும், இந்தக் கூட்டம், கண்கள், காதுகள் என்றும் நினைக்கும்போது எவ்வளவு ஆனந்தமாய் இருக்கு தெரியுமா? இந்த ஆனந்தத்திற்கு ஈடு ஏது? இனிமேல் நமக்குள் எந்தவித பேதமும் கிடையாது. கோபால் ஒரு எஞ்ஜினியர். இவனோட பொறுப்பில், ஒரு சிறு தொழிலை துவக்குவோம்... நாம் ஐம்பது பேராய் நுழைந்து, இப்போ முந்நூறு பேராய் ஆயிட்டோம். மனதுக்குள்ளேயே குமைந்து கொண்டிருக்கும் ஏழைகள், சந்தர்ப்பம் கிடைத்தால் புரட்சிப் படையோடு சேர்வார்கள்... பெரிய மனிதர்கள் விடுக்கும் போராட்டத்தை ஆண்டியை மாதுரி ஒரு சில ஏழைகள் வலுவாகப் பிடித்துக்கொண்டால் இதர ஏழைகள் நிச்சயம் நம் பக்கமே வருவார்கள் என்பதை நிரூபிச்சிட்டேர்ம். அந்தக் காலத்து மன்னர்கள். எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு அறிகுறியாக... அந்த நாட்டுப் பகமாடுகளைக் கைப்பற்றிக் கொண்டு வருவார்களாம். எதிரி... மாடுகளை மீட்டி விட்டால், போர் துவங்கும்... இதுபோல் நம் ஆண்டியோட மாட்டைப் பறித்து. பண்ணையார்கள் போர்ப் பிரகடனம் செய்தார்கள். நாம் அந்த மாட்டை மீட்டிவிட்டோம். இனிமேல்தான் இந்தப் போராட்டம் போராகப்போகிறது. மக்கள் சகதியின் முன்னால், எந்த சக்தியும் தூளாகும்... சரி... மாடுகளைக் கட்டிவிட்டு சீக்கிரமாய் வாருங்கள்... பினாமி நிலத்தில் போய் ஏர் கட்டுவோம்..." தங்கம்மாவும், இதர பெண்களும், கறவை மாடுகளைப் பற்றிக் கொண்டு, தத்தம் இருப்பிடம் வந்தார்கள். தங்கம்மா, மாட்டையும். அதன் கன்றையும் ஆண்டியின் வீட்டில் கட்டினாள். அவள் அம்மாக்காரி. அதற்கு வைக்கோல் கொண்டு வந்து போட்டுவிட்டு, கூட்டத்தை நோக்கி ஒடினாள். தங்கம்மாவும், அதோ அந்தப் புளிய மரத்தில் இருந்து வயக் காட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் புதிய ஜாதியுடன் சேரத் துடித்த வளாய் ஒடுகிறாள். அந்த ஓட்டத்திலும், அத்தை மகன் ஆண்டியின் கம்பீ மான குரலில் கட்டுண்ட பள்போல், சிறிது நின்று ரசித்துவிட்டு, மீண்டும் பாய்ந்து நடக்கிறாள். இதுவரை தெரிந்தும், தெரியாமலும் இருந்த சங்கதிகள், இப்போது அசாதாரணமாய்த் தோன்ற, அநதத் தோற்றத்தில் உயர்ந்து கம்பீரப் பட்டவர்களாய், நீண்டதோர் போராட்டத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டவர்களாய், புதிய பாட்டாளி ஜாதி, ஆண்டியப்பன் - சின்னான் வழி நடத்த நிலம் நோக்காமல், தொலைவில் தெரிந்த பினாமி நிலக்காட்டை நோக்கி, நிமிர்ந்து சென்று கொண்டிருந்தது. "புதிய ஜாதி பிறக்குது" என்ற பாடல், ஆன்மீக ராகத்துடன் ஒலிக்க, அந்த ஒலியே ஆகாயம் பூமியெங்கும் பேரொலியாய் வியாபிக்க, ஒருவரே பலராய் ஆனதுபோல், பலரே ஒருவராய் ஆனது போல், வெல்வதும் வேண்டாம், வெல்லப்படுவதும் வேண்டாம் என்ற இலக்கை நோக்கி, கோழையாய் வாழ மறுத்த அந்த ஏழைக் கூட்டம், போய்க் கொண்டிருந்தது.