பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 17 இதுவரைக்கும் தன்னை 'அம்மா' என்று அழைக்கும் இந்த தங்கம்மா, தனக்கு அடி கொடுத்ததில், நிஜமாக அடிபட்டவள் போல முதலில் அதிர்ந்து போன மல்லிகா, ஊரின் நாட்டாண்மைக்காரரின் மகளான அந்த பி.யூ. லிக்காரி, தன் பெண்மையை, ஆண்மையாக மாற்றியது போல பேசினாள்: "யாரடி. டி போட்டுப் பேசுற... எச்சிக்கல நாயே... ஒப்பன் எங்க மாமா வீட்டுல நாயி மாதுரி வேல பார்க்கார். நீ வயலுல கூலிக்கு களை பிடுங்கப் போற வேலைக்கார நாயாடி... பேசுற... நான் அவனப் பேசுனால் ஒனக்கு என்னடி மாணிக்கம் மச்சான்கிட்ட நிற்க... அவனுக்கு என்ன தகுதிடி இருக்கு...?" "முதல்ல ஒன் மாணிக்கத்துக்கு தகுதியிருக்கான்னு பாருடி... அவரு. ஒத்த கைக்கு... நீ கண்ணடிக்கிறவன் பெறுவானாடி... எங்க அத்த மகன் எப்படி இருந்தால் ஒனக்கென்னடி... உன்னையாடி... கட்டிக்கப் போறாரு... நீ கூப்புட்டாலும் அவரு வரமாட்டாருடி..?" இயல்பிலேயே, பெருமைக்காரியான மல்லிகாவால் தாள முடியவில்லை. தங்கம்மாவுக்கு இணையாகவும் பேச முடியவில்லை. ஆகையால், ஆளுதவியைத் தேடினாள். "ஏ... பெரியய்யா... இங்க வாங்க... சீக்கிரமா வாங்க... இந்த கூலிக்கார நாயி... என்ன பேச்சுப் பேசுறான்னு பாரும்...!" தங்கம்மா, சிலிர்த்தாள். "நாங்க... கூலிக்கார நாயி மட்டுமில்லடி... ஒன்னமாதுரி அகங்காரப் பன்னிகள... வேட்டையாடப் போற நாயிங்கடி... என் அத்த மகனுக்கா... மாட்டை வச்சுக்கத் தகுதியில்லன்னு சொல்லத... ஒன் பரமசிவம் மாமா கிட்ட... அவரு. மாட்ட கொடுத்துட்டா... நான் இந்த ஊர்ல. இருக்கலடி... ஒங்க... ஜம்பம்... இனுமே சாயாதடி எங்கள மனுஷங்களா நினைக்காத ஒங்கள நாங்க... மனுஷங்களா நினைக்கப் போறதில்லை. " தங்கம்மா, வேகமாகப் போனாள். ஆவேசந் தணியாத கண்ணகி போலப் போனாள். வழியில், அந்த ஜெர்ஸி இனப் பசுமாட்டோடு, ஆண்டியப்பன் போய்க் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும், அவளுக்கு ஆவேசம், அழுகையாகியது. ஏங்கி, ஏங்கி அழுதாள். அப்போதும், அவளை ஆறுதலாக அணைக்கப்போன ஆண்டியப்பனை முறைத்துக் கொண்டே சிறிது விலகி நின்றாள். பிறகு, நடந்த சண்டையை விளக்கினாள். ஆண்டி ஆறுதல் சொன்னான்: "பேசினால் பேசிட்டுப் போறாள்... அவள். எப்போதுமே... திமிர்பிடிச்சி பேசுறவதான்!" "மாட்டை மட்டும். நீரு கொடுத்துடப்படாது..." وم . لا كك2