பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 ஊருக்குள் ஒரு புரட்சி மாசானம், கோபத்தோடு கேட்டார்: "நீரு பேசுறது முறையில்லாத பேச்சு... முழுப் பூசணிக்காய சோத்துக்குள்ள மறைக்கப் பாக்கிற பேச்சு. சங்கத் தலைவர் என்கிற பொறுப்போட பேசனும்..." "நான் பொறுப்போட பேச ஆரம்பிச்சா அப்புறம் நீரு வெறுப்போட போவ வேண்டியதிருக்கும். போன வருஷம். நீரு. உழவுமாடு. சங்கக் கடனுல வாங்குனிரு. சரி. சந்தையில் இருந்து மாட்ட வீட்ல கட்டிட்டு அப்புறமாவது வித்திருக்கலாம். செஞ்சீரா? வாங்குன சந்தயிலயே மாட்ட வித்தீரே. இதுக்கும் வேணுமுன்னா நோட்டிஸ் அனுப்பட்டுமா..." "மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடாதேயும் மச்சான்." 2 "நானும் அதத்தான் சொல்லுதேன். முழங்காலுல அடிச்சால், மொட்டத் தலையில் வலிக்கத்தான் செய்யும்... மொட்டத் தலையில காயம்பட்டால் முழங்காலத் தூக்க முடியாது. நான் சொல்றது உமக்குப் புரியுதா... இல்ல புரிய வைக்கனுமா...?" மாசானத்திற்கும் புரிந்தது. புரிய வேண்டாத அளவுக்குப் புரிந்தது. ஆண்டியப்பனுக்கும் புரிந்தது. அயோக்கியத்தனம் செய்கிறவன் நியாயம் பேசினால், அந்த நியாயமே அநியாயமாகிவிடும் என்பது புரிந்தது. என்ன செய்ய... எப்படியாவது மாட்டை மீட்டியாக வேண்டும். அதுவரை, மாசானத்திடமிருந்து மீளக் கூடாது. பொருளாளர் கோபால், ஒரு யோசனை சொன்னான். "ஆல்ரைட்... மணியக்காரர் கிட்ட போவோம். அவருகிட்ட மாடு திருடுபோனதுக்கு ஒரு ரிப்போர்ட் வாங்கிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன் போவோம். நாம் யார் என்கிறத இவங்களுக்குக் காட்டியாகணும்..." மாசானம் கழட்டிக் கொண்டார். இதர நபர்கள், ஊர்வலம் போலப் போனார்கள். மணியக்காரர் மாடசாமியின் வீட்டு வாசலுக்குப் போனார் கள். வெளித் திண்ணையில் உட்கார்ந்து உள்ளே எட்டிப் பார்த்தார்கள். இரண்டு தையல் மிஷின்கள். மூன்று நெற்குதிர்கள். இரண்டு ஜோடி உழவு மாடுகள். தழைமிதிக் கருவிகள். யந்திரக் கலப்பைகள். மாடசாமியின் மனைவியான, மகளிர் சங்கத் தலைவி சரோஜாவும், அவர் மகள் மல்லிகாவும் ஒரு பக்கம் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே அடைக்கலசாமியும் அவர் மகள் தங்கம்மாவும் நின்று கொண்டிருந் தார்கள். அடைக்கல்சாமி மகளை அதட்டினார். "நாம பரம்பர பரம்பரயா... சேவகம் செய்யுற குடும்பம் இது. மல்லிகாவ... நீ திட்டுனது தப்பு... தெரியாமல் பேசிட்டேன்னு மட்டும் நீ சொல்லல... இப்பவே ஒரு கொலை நடக்கும். உம். மல்லிகா கிட்ட..."