பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35 4 அந்தக் காலத்தில், அடிமைகளைத் தண்டிக்கும் வகையில் அவர்களை ஒருவர்பின் ஒருவராக சிங்கக் கூண்டுக்குள் விட்டு, பசியோடு பாய்ந்து கவ்வும் சிங்கத்தையும், அதன் பசிக்கு ருசியாகி, குருதி கொப்பளிக்க, நரம்புகள் தெறிக்க, நாலு பக்கமும் அடைபட, மிருகத்தின் வாய்ப் பக்கம் போகும் அடிமையை சீமான்களும், சீமாட்டிகளும் பத்திரமான இடத்தில் அமர்ந்து ரசித்ததாக, வரலாறு கூறுகிறது. அந்த வரலாறு இப்போது வேறு ரூபத்தில் அதே சமயம் மிகப் பெரிய வித்தியாசத்துடன் நடந்து வருவதற்கு எடுத்துக்காட்டாக, மல்லிகா, தங்கம்மாவை கண்களால் கவ்வுகிறவள்போல் பார்த்தாள். மாதர் சங்கத்' தலைவி சரோஜா அம்மையாரும், அவளை முப்பது வருடத்திற்கு முன்பே கையைப் பிடித்து, கழுத்தில் கயிறு கட்டிய கிராம முன்ப்ேபும், குறுஞ்சிரிப்புடன் மோவாய்களைத் தடவிக் கொண்டு. முன் நெற்றிகளைச் சுருக்கிக் கொண்டு. தங்கம்மாவைப் பார்த்தார்கள். வெளியே திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆண்டியப்பன், தங்கம்மா பக்கமும், மாணிக்கம் பி.ஏ.பி.டி., மல்லிகா பக்கமும், மனதுக்குள் அணிவகுத்துக் கொண்டார்கள். தங்கம்மாவோ, எதுவுமே நட்வாததுபோல், ஒரு கையை இடுப்பில் ஊன்றி, வில் மாதிரி வளைத்துக் கொண்டு கண்களை சுற்றியுள்ளவர் பக்கம் சுழலவிட்டுக் கொண்டிருந்தாள். அய்யாவைத் தேடி, புளியந் தோப்புப் பக்கமாகப் போய். அங்கே அவர் இல்லாததால் பதைபதைத்து, பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் பார்த்து விட்டு, இங்கே தெருவில் வந்து ஜாடைமாடையாகப் பார்த்தபோது, அடைக்கலசாமிக் கிழவர், தன் முதுகு மாதிரி, மகளின் சுயமரியாதை ஆகவேண்டும் என்று நினைத்தவர்போல், அவளை உள்ளே கூப்பிட்டு, மன்னிப்புக் கேட்கச் சென்னார். - நான்கு நாட்களுக்கு முன்பே, முன்சீப் நடந்த விவரத்தைச் சொன்னதும், மனதுக்குள் மகளைப் பாராட்டிய அந்த கூனுக்கிழவர். இப்போது கேடுகெட்ட... விசுவாசம் கெட்ட. எல்லாங்கெட்ட ஆண்டிப் பயலுக்காக தன் மகள் ஒரு கிராமத் தலைவரின் மகளை-அதுவும் தான் வேலை பார்க்கும் பண்ணையாரின் தங்கை மகளை, நாயே பேயே' என்று பேசியது, அதிகப் பட்சமாகத் தெரிந்தது. அவரும் ஒருதலைப் பட்சமாக நிற்கத் துணிந்துவிட்டார். இவள். பிறப்பதற்கு முன்பே, இவர் சேவிக்கும் குடும்பம் இது. மகள் வருவாள். போவாள். ஆனால் சேவகம் இருக்கே அது அப்படியல்ல. அது பாசத்தைத் தாண்டும் பக்தி. தங்கம்மா, அலட்சியமாக நிற்பது, கிழவருக்கு அவமதப்பாகத் தெரிந்தது. கண்கள். ரத்தம் கொப்பளிப்பது ப்ோல் சிவக்க, "இப்போ, தெரிஞ்சி தெரியாம பேசிட்டேன்னு கேக்கட்போறியா..இல்ல..." என்றார்.