பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஊருக்குள் ஒரு புரட்சி மாணிக்கம் பி.ஏ.பி.டி., ஆனையாளரிடம் நடந்த விவரங்களை ஒப்புவித்தான். அந்த ஆணையாளர் நேர்மையானவர். அதே சமயம் தனக்குக் கீழே இருப்பவர்களையும் நேர்மையாக்க நினைத்ததால், மேலே இருப்பவர்களின் பொல்லாப்புக்கு ஆளானவர். ஏற்கெனவே இந்த பரமசிவம் தனக்குக் கட்டாத - கட்ட விரும்பாத வீட்டுக்கு சிமெண்ட் அலாட்மெண்ட் கொடுக்கவில்லை என்பதற்காக இவர் லஞ்சம் வாங்குவதாக கலெக்டருக்கு புகார் செய்து அந்த புகார் மனுவை விசாரிக்க கலெக்டர் தேதி குறித்திருக்கிறார். இந்தச் சமயத்தில். இந்த பரமசிவத்தைப் பகைப்பது தூக்குப் போட்டுச் சாவதற்குச் சமம். அதோடு ஆணையாளருக்குப் பல அபிஷியல் சிரமங்கள். வேலைக்கு உணவு திட்டத்தை பழுதில்லாமல் செயல்படுத்த வேண்டும். யூனியன் கணக்குகளை தணிக்கை செய்து வரும் ஆடிட்காரர்களுக்கு ஒரு மாதம் வரைக்கும் இவர்தான் சிகரெட்டில் இருந்து சினிமாவரையில் காசு கொடுப்பதோடு, அவர்களின் மூன்று வேளைச் சாப்பாட்டிற்கும் இவர்தான் மொய் எழுத வேண்டும். பயணப்படி வாங்கும் ஆடிட் காரர்கள். ஒரு நயாபைசா தங்கள் உணவிற்காக செலவழிக்கத் தயாராக இல்லை. தணிக்கை என்பது ஆணையாளர் அவர்களுக்கு தனிக் கை யால் செலவழிக்க வேண்டும் என்று அன் அபிஷியலாக ஆகிப் போன அபிவியல் சமாச்சாரம். இந்த வேதனையில் அவருக்கு நற்பணிமன்ற வேதனை சின்னதாகத் தெரிந்தது. ஆகையால் அந்த பிள்ளை குட்டிக்காரர் பக்குவமாகப் பேசினார். "இது... எனக்கு சம்பந்தமில்லாத பிரச்னை. கலெக்டருக்கு மனுநீதி நாள்ல மனு கொடுங்க... இல்லன்னா... பால் பண்ணை அதிகாரியப் பாருங்க. இல்லன்னா கூட்டுறவு டெட்டி fஜிஸ்டிராரைப் பாருங்க... இல்லன்னா புராஜெக்ட் ஆபிஸ்ரப் பாருங்க... ஒண்ணும் முடியலன்னா போலீஸ் ஸ்டேஷன் போங்க... ஆனால் ஒண்ணு... நான் தான் இவங்களப் பாக்கச் சொன்னதா தயவுசெய்து சொல்லிடாதீங்க!" மாசானம், யூனியன் அலுவலகத்திலேயே ஒதுங்கிக் கொள்ள, நற்பணிக்காரர்கள், அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தை நோக்கிப் போனார்கள். மயானத்துக்கு அருகே இருந்த போலீஸ் நிலையத்தில், வழிமறிப்பது போல் போட்டிருந்த மேஜையில், காலைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பன். அவர்களைப் பார்த்ததும், வாங்கோ... வாங்கோ...' என்று எழுந்து வரவேற்றார். உடனே ஒடிப்போய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவர்களை எதிரே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்காரச் சொன்னார். அவர்கள் உட்கார்ந்ததும் கேட்டார்: "ஒங்க தலைவர் குமார். மன்னிக்கணும் மிஸ்டர் குமார் வரலியா...?" மாணிக்கம் முந்திரிக் கொட்டையானான்.