பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 5 தாய்ப்பாலே விஷமானதுபோல, தன் கையே தன் கண்ணைக் களைந்ததுபோல, லாக்கப்பிற்குள் ஆண்டியப்பன் தலையில் கை வைத்தபடி, உட்கார்ந்தான். நீதி... நிதி... என்கிறார்களே... இதற்குப் பேர்தான் நீதியா...? தர்மம். தர்மம் என்கிறார்களே... இதற்குப் பேர்தான் தர்மமா? இதோ, இந்தப் பூட்டிய அறைக்குள் இருக்கும் அவனுக்கு தொலை தூரத்தில் நடக்கும் ஒரு பொதுக் கூட்டத்தின் பேச்சுச் சத்தம் காதைக் குத்துகிறது. ஏழையை ஏய்க்கின்ற காலம் போய்விட்டது என்று ஒருவர் கனைக்கிறார். உடனே பலர் கை தட்டுகிறார்கள். அப்படிக் கை தட்டு பவர்கள் அநேகமாக ஏழைகளாகத்தான் இருக்கவேண்டும். சொல்ல முடியாத கை தட்டல், இடிபோன்ற முழக்கப் பேச்சு. யாருமே அதர்மத்தால் பாதிக்கப்பட அனுமதிக்கப்படாது' என்ற பசப்பல். ஆனால் இங்கே, இதே ஆண்டியப்பன். அங்கே போய் நடந்ததைச் சொல்ல வேண்டும் என்பதுபோல், இரும்புக் கம்பிகளை அழுந்தப் பற்றுகிறான். பைத்தியக்காரன்! அப்படி கம்பிகளை உடைத்துவிட்டு அங்கே போய் நடந்ததைச் சொன்னாலும், அங்கேயும் ஒரு வழக்கு 'புக் ஆகலாம் என்பதை அறியாத பேராசைக்காரன். ஏழைக்கு இந்த மாதிரி பேராசை தானே இருக்க முடியும்? எந்த இடத்தில் 'ஏழைக்கும் காலம் வந்துவிட்டது என்று முழங்கப்படுகிறதோ, அங்கே இருந்து ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இதோ இந்த இடத்தில்தான், இந்த ஏழை புலம்பத் தெரியாமல், புரிந்தது புரியாமல், தெரிந்தது தெரியாமல் தவிக்கிறான். திடீரென்று அந்தப் பொதுக்கூட்டத்தில் குமார் பேசுவதும், அவன் காதில் தானாய் பாய்கிறது. ஆண்டியப்பன், வெறுப்போடு சப்-இன்ஸ்பெக்டர் மேஜையைப் பார்க்கிறான். ஒரு இலக்கிய விழா அழைப்பிதழ் தென்படுகிறது."நீதியில் சிறந்தவன் நெடுஞ்செழியனா அல்லது மனுநீதிச் சோழனா என்ற பட்டிமன்றம் நடக்கப் போகிறதாம். தேவைதான். நடக்கக்கூடாதவைகள் நடக்கும் போது, இது மிக மிக அவசியம்தான். அப்பனைக் கொல்கிறவன், சத்திரம் கட்டிய கதைதான். நடந்ததை நினைக்க நினைக்க, அவனுக்கு நினைப்போ, அந்த நினைப்பிற்கான நெஞ்சமோ தேவையில்லை என்பது போல் தோன்றியது. அவன். உள்ளே போனதும், வெளியே இருந்த இளைஞர் நற்பணி மன்றக்காரர்கள், முதலில் விறைத்துப் போனார்கள். பிறகு மாணிக்கம் "சார் இது அநியாயம்..." என்று யார் வேண்டுமானாலும், அவனைப் பயப்படுத்தலாம் என்பது மாதிரி பேசினான். கடைசி வார்த்தையை, அவன் உச்சரித்த விதத்தில், அவை விழுங்கி விட்டவன் போலவும் தோன்றியது.