பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 45 இவர்கள் ஏன் இப்படிக் கெட்டுப் போகிறார்கள்? சீச்சி.. ஆண்டிக்கு ஒரு சிந்தனை. இவர்களும் என்னைப் போல் நியாயங்கேட்டு. அநியாயம் பெற்றவர்களாக இருக்கலாம். அயோக்கியன் யோக்கியனாகவும், யோக்கியன் பயந்தாங்கொள்ளியாகவும் ஆகிப்போன இந்தக் காலத்தில், ஏழைகளில் ஒரு சாரார் இப்படி ஆகிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் பொறுப்பல்ல. -- சிந்தனையை பின்னோக்கிச் செலுத்திய ஆண்டியப்பன், அந்த போலீஸ் நிலைய காம்பவுண்ட் வாசலையே பார்த்தான். அவனை, மாஜிஸ்திரேட் முன்னால் ஆஜர்படுத்த, போலீஸ் வான் நிற்கிறது. ஆனால் ஜாமீன் எடுக்க ஆளைக் காணவில்லை. மாணிக்கமும், கோபாலும், மற்ற இளைஞர்களும் எங்கே போய்விட்டார்கள் என்று தெரியவில்லை. மீனாட்சி. எப்படித் தவிக்கிறாளோ... குழந்தைக்குப் பால் கொடுக்க காத்தாயி வந்திருக்க மாட்டாள்... எப்படி வருவாள்? அவளைத்தான், அவன் மாமன் பெண்டாட்டி பழிபோட்டு பேசிவிட்டாளே... தங்கம்மாவை. இந்நேரம் அந்தக் கிழட்டுப் பயல் அடித்துக் கொன்னாலும் கொன்னுருப்பான். மகள் என்று அடித்து நான் என்று கொன்றிருப் t_}ff6টf . - , திடிரென்று சத்தங்கேட்டு, ஆண்டியப்பன் கண்களைச் சுழற்றினான். ஜாமீன் எடுக்க வந்திருப்பார்களோ... ஜாமீன்காரர்கள் வரவில்லை. அந்தக் காலத்து ஜமீன்தாரின் வாரிசுகளாக, தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்ட இந்தக் காலத்து பரமசிவமும், குமாரும் வந்தார்கள். அவர்களை அங்கே பார்த்ததுமே, சப-இன்ஸ்பெக்டர், இங்கே எழுந்தது மட்டுமல்ல... எதிர்கொண் டழைக்கவும் போய்விட்டார். பரமசிவமும், குமாரும் அவர் காட்டிய நாற்காலிகளில் அமர்ந் தார்கள். குமார் "தேங்க் யு வெரிமச். நீங்க இல்லாட்டா... ஊர்ல லா அண்ட் ஆர்டர் ப்ராப்ளம் வந்திருக்கும்" என்றான். பஞ்சாயத்துத் தலைவர், "இன்னைக்கு. சர்வகட்சி பொதுக் கூட்டம். நான் தலைமை தாங்கினேன், இவன் பேசினான்" என்ற போது, சப-இன்ஸ்பெக்டர் "நான்தான் கூட்டம் நடத்துறதுக்கே லைசென்ஸ் கொடுத்தது" என்றார். உடனே எல்லோரும் சிரித்தார்கள். குமார் மெல்ல எழுந்து, ஆண்டியப்பன் பக்கமாக வந்து. மெல்லிய குரலில் "ஆண்டி... இனுமே ஒழுங்கா... நடந்துக்குவேன்னு சொல்லு. விட்டுடச் சொல்றேன். இல்லன்னா ஏழு வருஷம். ஏதோ பழகுன பாசத்துல கேக்குறேன்" என்றான். ஆண்டியபபன் யோசித்தான். நமக்கேன் வம்பு பேசாமல், குமார் சொன்னபடி கேட்கலாமா? அடுத்த வருவடிம் இவன் தயவுலேயே. பறிபோகாத பசுமாட்டை வாங்கலாம். இப்போ இவன் பேச்சைக் கேட்டு