பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஊருக்குள் ஒரு புரட்சி "மிஸ்டர்... நீங்க போஸ்டல் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்கது எனக்குத் தெரியும். ஒங்களைப்பற்றி... ஒரு சீக்ரட் ரிப்போர்ட் அனுப்ப அதிக நேரம் ஆகாது." "முதல்ல அதைச் செய்யுங்க சார். அங்கே வேலை பார்க்கிற என்னோட சகாக்கள் நான் கோட்டாவுல வந்தவன்னு மனசுக்குள்ளேயே எரியுற எரிச்சல் என்னையும் சுடுது. அதோட, இன்றைய சமூக அமைப்பில் மாதச் சம்பளக்காரன் எவனும் உருப்படப் போறதில்ல. இருந்தாலும், நோஞ்சான் குழந்தை செத்தால் தேவலன்னு நினைத்தாலும், அது சாகிறதைப் பார்க்க விரும்பாத தந்தையைப் போல, எனக்கும் வேலையை ராஜினாமாச் செய்ய மனம் வரல... தானா முடியாத ஒன்றை... உங்க போலீஸ் பேனா மூலமாவது செய்யுங்க... ஒங்களுக்குக் கோடிப் புண்ணியம். இவ்வளவு பேசுறீங்களே... இந்த ஆண்டியப்பனுக்கு, நீங்க வழங்கி இருக்கிற நியாயம், நியாயந்தானா?" "சம்பந்தமில்லாத விஷயத்தைப் பேசாதீங்க." "இன்னும். ஒரே ஒரு சம்பந்தமில்லாத விஷயத்தை மட்டும் பேசிட்டு, வாயை மூடிக்கிறேன். உங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும் மிஸ்டர் தங்கப்பன். கஷ்டப்பட்ட ஒரு ஏழைக் குடும்பத்தில் படித்து முன்னேறி, பெரிய பெரிய சமூக லட்சியங்களோட வேலையில் சேர்ந்தவரு... ஆரம்ப காலத்துல... ஏழைகளுக்காகப் போராடி... பணக்காரர்களோட விரோதத்தை சம்பாதிச்சவரு... இதனாலேயே ஒரு தடவ சஸ்பெண்ட் ஆன தியாகி... நாம சஸ்டெண்ட் ஆனதுக்கு, இந்த ஏழப் பயலுவ தானே காரணமுன்னு நினைத்து ஏழைகள் மேல இருந்த அன்பை, வெறுப்பாய் மாத்திக்கிட்டவரு... இதுக்கு ஒங்களை காரணமுன்னும் சொல்ல மாட்டேன். இந்த சமூக அமைப்புத்தான் காரணம். கன்வெர்ட்ஸ் ஆர் ஆல்வேய்ஸ் எக்ஸ்ட்ரீமிட்ஸ்... கட்சி மாறுறவன். தீவிரவாதியாய் ஆகிறது சகஜம். அப்புறம் நான் வரட்டுமா... இல்ல... எதுலயாவது கையெழுத்துப் போடணுமா... இல்ல எதுக்குள்ளயாவது போய் நிற்கனுமா...?" சப்-இன்ஸ்பெக்டர் தலையை கவிழ்த்துக் கொண்டே போகலாம். என்றார். அவர், சின்னப்பிள்ளை மாதிரி நெளிந்தது. சின்னானுக்கே கஷ்டமாக இருந்தது. பைக்குள் வைத்திருந்த ஒரு கசங்கிய காகிதத்தை எடுத்து, அவரிடம் நீட்டி, படியுங்க சார் என்றான். அதை முதலில் வேண்டா வெறுப்பாகப் படித்த அந்த போலீஸ் இளைஞர் பிறகு, அவனைப் பிரமிப்பாகப் பார்த்தார். சின்னான், அமைதியாகப் பேசினான்: "யெஸ் சார்... எனக்கும் சர்வீஸ் கமிஷன் நடத்துன குரூப்-ஒன் போட்டியில டி.எஸ்.பி. வேல கிடச்சது. நானும், எனக்குப் பொண்ணு கொடுக்கத் தயாராய் இருந்த ஒரு ஹரிஜன எம்.எல்.ஏ. மூலம் வேலையில சேரலாமுன்னுதான் முதலில் நினைத்தேன். அப்புறம் யோசித்துப் பார்த்தேன். எனக்கு. மேல் ஜாதிக்காரர்கள் மேல அளவுக்கு மீறின கோபம்