பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஊருக்குள் ஒரு புரட்சி ஒருவர் கை ஒருவர் மீது பட்டவுடனேயே துள்ளித் துடிக்கும் அந்த இரண்டு இளம் மேனிகளும், ஈருயிர் ஒருடலாய் ஆனாலும். அந்தத் தழுவலில், ஒருவித ஆறுதல்தான் இருந்தது. இன்பமோ... பருவத் துடிப்போ இல்லை. ஆனால் அந்த ஆறுதல் - அந்தத் துன்பப்பகிர்வு, அந்தத் தோளோடு தோள் நிற்கும் துணிவான துணை, ஆயிரம் இன்பக் கிளுகிளுப்புக்களைவிட, மேலானது. ஆயிரமாயிரம் பருவப் பகிர்வு களைவிட, மேலான ஆறுதல். உடலை ஊடுருவி, அதனுள்ளே இருக்கும் ஆன்மாவை அணைப்பதற்கான தழுவல் முயற்சி அது. தகாத முயற்சியல்ல. இது, ஜனங்களுக்கு எப்படித் தெரியும்? தெரியவில்லை. ஆகையால் தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள் - அவசரமாகப் போய்க் கொண்டிருந்தவர்கள் கூட, சினிமாவுக்கு லேட்டாகப் போனவர்கள்கூட, இலவச சினிமா கிடைத்ததுபோல், வேடிக்கை பார்த்தார்கள். இதைப் புரிந்துகொண்ட ஆண்டியப்பன், தங்கம்மாவை மெல்ல விலக்கவும் இருவரும் பிரிந்து நடந்தார்கள். "மீனாட்சி... எப்படி இருக்கா தங்கம்?" "அத ஏன் கேக்கியரு... பாவி மனுவி அழுத அழுகை இருக்கே... அத சொல்லியும் முடியாது. சொன்னாலும் தீராது. கையை எடுத்து மார்புல அடிச்சதுல கடைசில... மார்புல இருந்த புண்ணு பழையபடி வலிக்க ஆரம்பிச்சுட்டு. சீக்கிரமாக நடயும். மயினி துடிச்சிக்கிட்டு இருப்பாவ..." "குழந்தைக்கி பாலுக்குக் காசு கொடுக்காம வந்துட்டேன். காத்தாயியும் வந்திருக்கமாட்டாள். என்ன பண்ணினாள்?" "இந்தத் தங்கம்மா செத்துப் போயிட்டான்னு நினைச்சீராக்கும்..." "நீ இருக்கையில... நான் எங்க வேணுமுன்னாலும் இருக்கலாம். லாக்கப்புலகூட இருக்கலாம். சும்மா... விளையாட்டுக்குச் சொன்னால், இப்படியா முகத்த தூக்குறது? சரி. ஒய்யா எப்படி இருக்கார்?... நீ... என் வீட்டுக்குத்தான போனே?" "நல்லா இருக்கே... ஆயிரந்தான் அடிச்சாலும், அவரு என்ன பெத்த அய்யா... அவரு. கையப் பிடிச்சிக் கொடுக்காம... நான் ஒடு காலியா... ஒம்ம வீட்டுக்கு வருவேன்னு மட்டும் நினைக்காதையும்..." "ஏய்... நீ என் வீட்டுக்கு எத்தனையோ தடவ வந்துருக்க... ஒவ்வொரு தடவயும். ஒங்க அய்யா... எனக்கு ஒன் கையைப் பிடிச்சா கொடுத்தாரு? மனுஷன் ஒரு தடவகூட கொடுக்க மாட்டாரு போலுக்கே..." "அதுவேற இதுவேற... நான் இதுவரைக்கும்... எங்க அத்தை வீட்டுக்குத்தான் வந்துக்கிட்டு இருக்கேன். ஆண்டியப்பன் வீட்டுக்கு இல்ல..." "ஏய்... பேரையாச் சொல்லுதே..."