பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஊருக்குள் ஒரு புரட்சி ஒரேயடியாய் வெளியப் பாத்து போயிட்டாரு... இது தெரியாம... இந்த தங்கம்மா அத்தை... தான் அய்யாவக் கொன்னது மாதுரி அழுவுறாள். அவரக் கொன்னது அந்த மல்லிகா செறுக்கிமவள் தான்." "எல்லாம் இந்த ஆண்டியப்பன் பயலால வந்த வினை... ஆழந்தெரியாமக் கால விடலாமா... கல்லுல தலை மோதுனாலும். தலையில கல்லு மோதுனாலும். சேதம் தலைக்கு தானவே? இது ஏன் இந்தப் பயலுக்குத் தெரியல... பரமசிவத்துக்கிட்ட இவனால மோத முடியுமா... இவன் அவனுக்கு ஜோடியா?" "நீரு சும்மா கிடயும்வே... அவனுக்கு இருக்கிற மானத்துல... ஒமக்கு நாலுல ஒண்னு இருந்தால் ஊரு இப்படி குட்டிச்சுவரா போயிருக்காது." "நீரு... அந்தக் குட்டிச்சுவர்ல. முதுகைத் தேச்சிக்கிட்டு நிக்க மாட்டிரு. இந்த ஆண்டிப்பயல பாரும்வே. எப்படி அடிச்சிப் புரண்டு வாரான்..." ஆண்டியப்பன், தலையில் அடித்துக் கொண்டு வந்தான். வந்த வேகத்தில் ஒரு மரத்தில் மோதி, பின்னர் அந்த மரத்திலேயே தலையை மோதிக் கொண்டு நின்றான். இரண்டுபோ ஓடிபபோய் பிடித்துக் கொண்டார்கள். அவர்களை விலக்கிக் கொண்டே அவன், மாமாவின் வீட்டுக்குள் ஒடினான். மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த மாமாவின் காலைப் பிடித்துக் கொண்டே "மாமா... ஒம்ம நான் கொன்னுட்டேனே... எடுத்து வளத்த ஒமக்கு... நானே... எமனாய் மாறிட்டேனே"ன்னு புலம்பினான். அப்போது தான் அழுகையை ஒய்த்துவிட்டு, மருவிக் கொண்டிருந்த தங்கம்மா, கேவிக் கொண்டே "நாம ரெண்டு பேருமாய் அய்யாவக் கொண்ணுட்டோமே மச்சான்" என்று சொல்லி முடிக்குமுன்பே தலையில் அடித்துக் கொண்டாள். இன்னொரு பக்கமாக அழுதுகொண்டிருந்த அவள் அம்மா, மகளைப் பார்த்தாள். 'இன்னுமா மச்சான்? இவனா இங்க வந்திருக்கான்? அந்தக் கிழவி எழுந்து நின்று கத்தினாள்: "நீ எதுக்குல வந்தே? நாய்க்குப் பொறந்த நாயே... என்னோட மவராசனை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததுமுல்லாம. கேலி பண்ணுததுமாதுரி வந்தால நிக்கே? கொலகாரப் பாவி! நீ போறியா... இல்ல நான் இந்த கடினத்துலயே உயிர விடட்டுமா? போறியா... இல்லியா... கொலகாரப் பாவி... போடா..." ஆண்டியப்பன், தங்கம்மாவைப் பார்த்தான். அவள் பரிதாபப் படுவதுபோல் பார்த்தாளே தவிர பதில் சொல்லவில்லை. கிழவிக்குக் கோபம் ரெட்டிப்பாகியது. "இன்னுமால நிக்கிற... போறியா இந்த கடினத்துலயே உயிர விடட்டுமால சோம்பேறிப் பய மவனே."