பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 57 கொடுக்கப்பட்டது. ஏதோ பெரிய காரியம் செய்ததுபோல், இரண்டு பேர் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றார்கள். ஊருக்கு, ஒரு வண்டியில் அதே ஒலைப் பாயில் பிணம் வந்தபோது, சேரி ஜனங்களும், ஜாதி ஜனங்களும் கூடிவிட்டார்கள். மெளனம் பயங்கரமாகப் பேசியது. பயங்கரமே மெளனமாகியது. மாடியில் நின்றபடியே, மல்லிகா வாயைச் சப்புக் கொட்டிக் கொண்டே அந்தப் பிணத்தைப் பார்த்தாள். ஆண்டியப்பனும், அவன் தங்கை மீனாட்சியும், வீட்டுக்குள்ளேயே ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு. சிந்தையிழந்து, செயலிழந்து கிடந்தார்கள். அந்த ஊரில் எத்தனையோ பேர், தற்கொலை செய்திருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் அவர்களை வெளியே தெரியாமலே புதைத்திருக் கிறார்கள். கிராம முன்ப்ேபே, சிலரை சுடுகாடு வரைக்கும் போய் வழியனுப்பி இருக்கிறார். ஆனால் ஒம்மா சமாச்சாரம் தெரியாதாம்மா என்று. தன் சம்சாரத்தைப் பற்றிப் பேசிய அந்தக் கிழவரை, செத்த பிறகும், முன்சீப் சும்மா விட விரும்பவில்லை. அதோடு, மல்லிகா வேறு. 'தங்கம்மாவை நாய் மாதுரி இழுத்தடிக்கணும். அவள், ஆஸ்பத்திரில நாய் மாதுரி... காத்துக்கிடக்கணும். நீங்க... ஒங்க டுட்டியைத் தானே செய்யுறிங்க என்றாள். பரமசிவம்-முன்சீப் வகையறாக்களுடைய வீடுகளுக்கு வாசல்போல, கால்களுக்குச் செருப்பு போல, கைகளுக்குக் கத்தி போல வாழ்ந்த ஒரு ஜீவனை, இறந்த பிறகு விட்டு வைக்கத் தயாராக இல்லாத மணியக்காரரின் செயல், ஊரில் ரகசியமாகக் கண்டிக்கப்பட்டது. சொல்லியே தீர வேண்டும் என்ற உணர்வில் வந்து, சொல்ல முடியாமல் போன முணுமுணுப்புகள்...! ஜாக்கிரதையான குமுறல்கள்... 'மாடாய் உழைச்ச மனுஷனையே. ஆஸ்பத்திரியில அறுத்துப் போட வச்சாங்கன்னால்... நம்மள விட்டு வைப்பாங்களா...' ஒரு வாரம் ஓடியது. ஆண்டியப்பனுக்கு. லாக்கப்பே தேவலைபோல் தோன்றியது. தன்னுள்ளே பாதுகாப்பாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் இருந்த ஒன்றைப் பறிகொடுத்த சோகத்திலிருந்து அவனால் மீளமுடியவில்லை. மாமா... மல்லிகா சொன்னதுக்காக மட்டுமா செத்திருப்பார். இல்ல... அதுக்காக மட்டும் இருக்காது. என்னை லாக்கப்புல போட்ட வருத்தமும் இருந்திருக்கும். ஊர்ல அநியாயக்காரங்களுக்கு அடிமையா போயிட் டோமே என்கிற வருத்தமும் இருந்திருக்கும். அக்கா மகனோட மாட்டைப் பிடிச்சி... மானபங்கப் படுத்திட்டோமே என்கிறதும் இருந்திருக்கும்... இப்படி எல்லாம் இருந்ததுனால... அவரு இல்லாமப் போயிட்டாரு... ஆண்டியப்பன், செய்வதறியாது திகைத்து நின்றான். தங்கைக்கு மருந்து வாங்கப் பணம் இல்லை. வேலைக்குப் போய் நாளாகி விட்டது. இருந்த அரிசி தீர்ந்துபோச்சு... 'டவுனுக்குப் போகும்போதுகூட... எல்லாப் 'பயலுவளுக்கும் இவனே டிக்கட் எடுத்தான்... ஒரு பயலாவது... நான்