பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஊருக்குள் ஒரு புரட்சி எடுக்கேன்னு பையைக்கூடத் தொடல... தங்கச்சி கழுத்துல... காதுல இருந்ததுல்லாம், மருந்துக்குப் போயிட்டு... குழந்தைக்கோ பாலில்ல... காத்தாயியக்கூடக் காணல. டீக்கடையில... ஆழாக்கு தண்ணிப் பாலை கேட்டுப் பார்க்கலாம். குழந்தைக்கி காய்ச்சி கொடுத்துட்டு மத்தியானமாய் மரம் வெட்டப் போகலாம். மூணு ரூபாய் கிடைக்கும். அரைக்கிலோ அரிசி, ஒரு வாழைக்காய், மிச்சத்துக்குப் பாலு. ஆண்டியப்பன் சலிப்போடு டிக்கடைக்குப் போனான். அங்கே இருந்தவர்கள் இவனை ஏனென்று கேட்கவில்லை. வழக்கமாக அவனைப் பார்த்து ஏண்டா பேரா. சடுகுடு விளையாட வாரீயா? நீ ஜெயிர்கட்டா என் மீசையை எடுத்துடுறேன் என்று கேலி பேசும் பழனியாண்டித் தாத்தா கூட பாராமுகமானார். தங்கச்சிக்கு எப்படிடா இருக்கு என்று கேட்கும் பெரியசாமி மாமா அவன் உட்கார்ந்த இடத்திற்கு அருகே உட்கார மனமில்லாதவர்போல். நின்று கொண்டிருந்தார். எப்படிப் பேசமுடியும் ஒருவர் அப்படி அவனிடம் பேசிய மறுநாளே அவர் மகனுக்கு பள்ளிக்கூடத்துல சர்டிபிகேட் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க... அதுவும் வரச்சொல்லிவிட்டு. அந்த சர்டிபிக்கேட் - 1966-ஆம் ஆண்டு படித்த சர்டிபிக்கேட். கிடைத்திருந்தால் அவர் பையனுக்கு டவுனில் பியூனாய் வேலை கிடைத்திருக்கும். அவனோட பேசிய இன்னொருவனை போலீஸார் பட்டை சாராயம் குடித்ததற்காகக் கூட்டிக்கொண்டு போனபோது எதிரே வந்த பஞ்சாயத்துத் தலைவரிடம் மாமா என்றான் அவன். அவரோ "ஆண்டி ஜாமீனுக்கு வருவாண்டா" என்றார். அப்படிப் பேசிவிட்டு, அவனை விடுவிக்கவும் செய்தார். அவன் எப்படி இவனிடம் பேசுவான்? வாயினை விற்று வார்த்தைகள் பேசினால் பட்டை போட முடியுமோ? ஆனால ஒரே ஒரு எளியவன் மட்டும் ஆண்டிக்கருகே உட்கார்ந்து கொண்டு "கவலப்படாதடா... ஆண்டி... ஒனக்கும் காலம் வரும்" என் றான். உடனே டிக்கடைக்காரன், அவனைப் பார்த்து. "ஒன் வேலயப் பார்த் துட்டுப் போயா. இங்க யாரும் அனாவசியமாப் பேசப்படாது" என்றான். ஆண்டியப்பன் எழுந்தான். இவனிடம் பால் வாங்க முடியாது. சீ... அவன் தந்தாலும் வாங்கப்படாது. உலகிலே யாருமே இல்லாமல் போனதுபோல, தான் மட்டும் தனியாக இருப்பதுபோல, ஆண்டியப்பன் புளியந்தோப்பைப் பார்த்து, போவது தெரியாமலே போய்க் கொண்டிருந்தான். வழியில் தங்கம்மா ஒரு மண் வெட்டியுடன் போனாள். கூலி வேலைக்குப் போய்க் கொண்டிருப்பாள். ஆண்டியப்பன் வேகமாக நடந்தான். இந்தத் தங்கம்மாகூட வீட்டுக்கு வரவில்லை. வீட்டுக்குக்கூட வரவேண்டாம். வழியில் பார்த்தால்கூட. முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாள்... எப்படி மனக வந்தது...