பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஊருக்குள் ஒரு புரட்சி "சரி... ஒனக்கு நேரமாவுது... நீ போம்மா... ஒன் கல்யாணத் துக்காவது சொல்லு... அழாதே... இந்த அழுகையை... நான் செத்தபிறகு வச்சிக்கலாம்." தங்கம்மா, சிறிது தயங்கி நின்றுவிட்டு. அவனையே குளுமை யாகவும், வெறுமையாகவும் பார்த்துவிட்டு மண்வெட்டியை மறந்து விட்டுப் போனாள். பிறகு, நினைவு வந்தவளாய் திரும்பி வந்தாள். மண்வெட்டியை எடுத்து, அவளிடம் கொடுக்கப்போன ஆண்டி, பிறகு அதை தரையில் வைத்துவிட்டு, தரையில் கால் படாதவன்போல், ஆகாயத்தில் பறப்பவன்போல், அதற்குள் எதையோ தேடுபவன்போல் நடந்தான். நையாண்டி மேளம்போல, இதயம் துடிக்க, உடம்பு வேர்க்க, உள்ளம் கனக்க, தலையெல்லாம் நோக, வேகவேகமாக நடந்து, ஊரின் ஒவ்வொரு மூலையிலும், இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் மாணிக்கத்தைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் மிஸ்டர் மாணிக்கம் பி.ஏ. பி.டி.யோ... 8 உள்ளூர் பள்ளிக்கூடத்தில், ஆசிரியர் வேலை கிடைக்காமல் போன மாணிக்கம் பி.ஏ., பி.டி. சிறிது யோசித்துப் பார்க்கத் துவங்கினான். இளைஞர் பெரும் பணி மன்றம் என்று புதிய அமைப்பை உருவாக்கிய குமார், இப்போது பட்டி தொட்டி பதினாறும் அறிந்த பிரமுகனாக மாறிவிட்டான். கிழவியின் பென்ஷனில் இருந்து, குமரியின் கல்யாணம் வரை, இந்த குமாரின் சொல் எடுபடுகிறது. இவனைக் கண்டால், அதிகாரிகளும் ஒரளவு பயப்படுகிறார்கள். கிராமத்தில் உள்ள படித்தவர்கள் அனைவருமே அவ்னைச் சுற்றி மொய்க்கிறார்கள். இன்றைய கிராமிய அரசியலிலும் மாவட்ட அரசியலிலும், அடிப்படைப் பிரச்சினைகளுக்காக வாதாடுபவனை விட வேலை வாங்கிக் கொடுப்பவன் - வேலையில் இருந்து எடுப்பவன் - பட்டைச் சாராயம் காய்ச்சுபவர்களை ஜாமீனிலோ அல்லது எதுவும் நடவாதது போலவோ காப்பாற்றுபவன் - எந்தக் காரியத்திற்கும் தராதரம் தெரியாமல், மிரட்டலின் பின்னணியில் சிபாரிசு செய்பவன் முதலிய குணாதிசயங்களும், அந்த குணாதிசயங்களைக் கொண்டு செலுத்தும் அதிகார சங்கிலித்தொடரை ஏற்படுத்திக் கொள்பவனுந்தான் அரசியல்வாதியாக முடியும். இந்தப் மாணிக்கத்தால் முன்னணிக்கு வரமுடியாமல் போனதுடன், ஒரு வாத்தியார் வேலைகூட கிடைக்க வில்லை. ஊர்க்காரர்கள் குமாரையும், மாணிக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். மானிக்கத்தை குப்பையில் போடவில்லை. குப்பையாகவே போடுகிறார்கள்.