பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஊருக்குள் ஒரு புரட்சி "எங்க மாமாவை பழசுன்னு சொன்னால் நானும் உங்களுக்குப் பழசுதான். சின்ன வயசுல நாம் பழகுனதை இப்போ புதுப்பிக்க முடியாது." "விளையாட்டுக்குச் சொல்றதை... வித்தியாசமாய் எடுத்தால் எப்டி? இனிமேல் சத்தியமாய்... பரமசிவம் சித்தப்பாவுக்கு எதிராய் எதுவும் செய்யமாட்டேன். போதுமா? அவரு வீட்ல என்ன விசேஷம்?" "ஒங்களுக்குத் தெரியாதா... பரமசிவம் மாமாவோட மூத்த பெண்ணுக்கும், மாசானம் சித்தப்பாவோட மகனுக்கும்... இன்னைக்கு நிச்சயதாம்பூலம். அதே முகூர்த்தத்துல அவரோட இரண்டாவது மகள் இந்திராவுக்கும், இளைஞர் பெரும்பணித் தலைவர் குமார் அண்ணாச்சிக்கும் நிச்சயதாம்பூலம். ஏற்கெனவே, அவங்க ரெண்டு பேருக்கும் காதல்." "அடிடா சக்கே... அப்போ நாம இரண்டுபேரு மட்டுந்தான் சும்மா இருக்கோம்." "அதுக்கு நான் காரணமில்ல. சரி. ரெண்டுல ஒண்ணைச் சொல்லுங்க... என் மனசு புரிந்திருந்தால் வாங்க...!" "ஒங்க குமார் அண்ணாச்சி இருக்கிற இடத்துல... நான் எதுக்கு?" "ஓங்க மல்லிகா இருக்கிற இடத்துக்கு. உங்களுக்காகவே இருக்கிற மல்லிகாவைப் பார்க்க வரப்படாதா...? சரி வழியை விடுங்க." "பரமசிவம் மாமாவுக்குத் துரோகம் பண்ணிட்டேன். அவரு முகத்துல எப்படி விழிக்கிறது?" - "கவலைப்படாதிங்க... அவரையும், குமார் அண்ணாச்சியையும், ஒங்களை... ஒங்கள் வீட்ல வந்து கூப்பிட வைக்கிறதுக்கு நானாச்சு..." "பரவாயில்லையே." "நான், மாதர் சங்க்த் தலைவி சரோஜாவோட மகளாக்கும்." "சரி... நானும் எங்க வயலுக்குப் போறேனாம். நீயும் ஒங்க வயலுக்குப் போறயாம். சரி... போவோமா...?" ஆண்டியப்பன் வீட்டுக்கு அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்த மிஸ்டர் மாணிக்கம் பி.ஏ.பி.டி. மல்லிகாவுடன் தோளில் தோள்பட, கையோடு கையுரச, வழிமாறி நடந்து கொண்டிருந்தான். இரவு வந்தது. பழைய பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம் வீட்டிற்கு பணக்காரர்கள் அதிகமாக வந்தார்கள். அந்தக் கிராமத்தில், ஜாதி வித்தியாசம் இல்லாததால், தட்டாசாரி தங்கசாமி, பண்ணையார் கதிர்வேல் பிள்ளை. ராமசாமிக் கோனார் முதலிய பெரிய மனிதர்களும், மாசானம், மாணிக்கம் முதலிய புதிய மனிதர்களும் கூடியிருந்தார்கள். மல்லிகா எப்படி மாணிக்கத்தை அங்கே கொண்டு வந்தாளோ, அதேபோல் அவள் அம்மா சரோஜா, கிராமத்தில் பணக்காரர்கள் பழைய கருவாட்டு' பேதங்காட்டாமல் ஒற்றுமையாக இருக்கவில்லையானால், ஏழை