பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஊருக்குள் ஒரு புரட்சி பரமசிவம் பதறினார். "எனக்கு என்னய்யா வந்துட்டு. ஆண்டியப்பன் எனக்கு எதிரியா? விசாரணைக்கு கூப்புட்டதாலயே நான் குற்றவாளின்னு அர்த்தமா? பாத்துப்புடலாம்..." "நான் அதுக்காவச் சொல்லலவே. காலம் கலிகாலம். நேத்து சாணி பொறுக்குன பயலுவகூட... இப்போ சட்டம் பேசுற காலமாப் போச்சு... அதனால் நாம ஒற்றுமையா இருக்கணும். ஒருவருக்கு வார ஆபத்தை... எல்லாரும் தனக்கு வந்ததா நினைக்கணும்... இல்லன்னால்... நமக்குத்தான் வம்பு. ஏய் மாணிக்கம்... நம்ம மானேஜர் ஜம்புலிங்கம்... ஒன்னை. பள்ளிக்கூடத்தில் ஹெட்மாஸ்டராய் போட்டுருவாரு... இனிமேலாவது சும்மா இருப்பியா? சிரிக்கான் பாரு... புரியுதா..." மாணிக்கம், புரிந்தவன்போல், ஏற்கெனவே தன்னை அணைத்துக் கொண்டிருந்த குமாரை தானும் அனைத்துக் கொண்டு சிரித்தான். பிறகு எல்லோரையும் பாசத்தோடு பார்த்தான். இந்தச் சமயத்தில் "எனக்கு ஒரு வழி சொல்லாட்டால் நானும் எல்லோரையும் இழுத்துவிட வேண்டியது இருக்கும்" என்று சொல்லிக்கொண்டே கூட்டுறவுச் சங்கத் தலைவர் உள்ளே வந்தார். ஊரில் ரகளை வரப்போவதற்கான ஒரு சம்பவத்தை சொல்லப் போனார். 9 சிவட்டுறவுச் சங்கத் தலைவரின் அநியாயமான கோபத்திற்கும், ஒரு நியாயம் இருந்தது. சங்கத்து உறுப்பினர்களில் முப்பது பேருக்கு ஒரு வங்கி, கறவை மாடு வாங்க, தலா மூவாயிரம் ரூபாய் வழங்க முன்வந்திருந்தது. அந்த வங்கியும் டார்ஜெட்டை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்ததால், சீக்கிரமாக லிஸ்டை அனுப்பும்படி சங்கத்தைக் கேட்க, கூட்டுறவுத் தலைவர், தன் உறவுக் கூட்டுக்குள், தூரமாகவும், பக்கமாகவும் இருந்த ஆறு பேரை லிஸ்டில் சேர்த்திருந்தார். ஆறு பேரில் நான்கு பேர். பால்மாட்டை நம்பத் தேவையில்லாத வாத்தியார்கள். இந்த ஆறு பேரும் சங்கத்தில் முறைப்படி உறுப்பினர் களாகச் சேருவதற்கு முன்னாலேயே இவர்கள் பெயர் லிஸ்டில் ஏறி, அந்த லிஸ்டு வங்கிக்குப் போய், டிராப்ட்டாக மாறி, டிராப்ட் கறவைமாடு களாகி, அந்த மாடுகளும். இவர்களது வீடுகளில் இறக்குமதியாயின. என்றாலும், என்னமோ தெரியவில்லை. மூன்று பசுமாடுகள் கொடுத்த ஒரு வாரத்திற்குள் செத்தன. இப்போது ஒரு பக மாடு, சாகக் கிடக்கிறது. அது சாகவில்லையானாலும், மாட்டின் உரிமையாளர் அதை சாக அடித்து விடுவார். ஏனெனில் இனிமேல் அது தேறினாலும் பால் தேறாது. செத்த பசுக்களை வாங்கியவாகள், கூட்டுறவுச் சங்கம் அனுப்பிய லிஸ்டில் இருந்தாலும், சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேராமல் இருந்தவர்கள். இப்போது நான் உறுப்பினர் இல்லை. பசுமாட்டுக்குப்