பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயங்கள்வரை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தெரிவித்தார். அவர் கொடுத்த உற்சாகத்தில், பதினேழு அத்தியாயங்கள் எழுதி, அவர் முடிக்கச் சொல்லுமுன்னாலேயே, கண்ணோட்டங் கருதி முடித்துக் கொண்டேன். வாரா வாரம் வாசகர்களின் கடிதங்களை எனக்கு அனுப்பி வைத்து, ஒரு எழுத்தாளனிடம் பத்திரிகையாசிரியர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் திரு. பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கும் அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொண்டு. கதையின் நலங்களையும், குறைகளையும் சுட்டிக் காட்டிய உதவி ஆசிரியர் ஜேம்ஸுக்கும் என் மனமார்ந்த நன்றி. கடிதங்கள் மூலம் பாராட்டிய தேவி வாசகர்களுக்கும் நன்றி. தொடர்கதை வந்து கொண்டிருந்தபோதே, அதை விமர்சித்து எனக்குக் கடிதங்கள் எழுதியவர் திரு. வல்லிக்கண்ணன். ஆரம்ப அத்தியாயங்கள். கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு போகிறதேயன்றி, கலையம்சமாக இல்லை என்றும், பிறகு சிறப்பாகப் பரிணாமப்பட்ட தாகவும் கருத்துத் தெரிவித்தார். உண்மைதான். குறிப்பிட்ட அத்தியாயங்களுக்குள் கதையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் அப்படி எழுதினேன். இந்த நூலில் கூட, அந்தக் குறையை முற்பகுதியில் அதிகமாகச் செப்பனிடாமல் மெத்தனமாக இருந்து விட்டேன். இளைய தலைமுறையை, காய்தல - உவத்தலின்றி ஆய்வு செய்து அடையாளங் காட்டும் திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு என் நன்றி. தொடர்கதை என்பது வேறு. நாவல் என்பது வேறு. அதே சமயம், விசுவாசத்துடனும், சமூகப் பிரக்ஞையுடனும் எழுதப்படும் ஒரு தொடர்கதையை, சிறந்த நாவலாகவும் ஆக்கிவிடலாம் என்று எனக்கு வழிகாட்டியவர், திரு. ஆர்.கே. கண்ணன். தேவியில் வெளியான பதினேழு அத்தியாயங்களையும் படித்துவிட்டு, புரட்சிக்குரிய களம் வலுவாக இல்லை என்று கருத்துத் தெரிவித்தார். இதை அறிந்து நான் எழுதி வைத்திருந்த லிங்குகளைப் படித்துவிட்டு. அவற்றை ‘ரிப்போர்ட்டாகச் சொல்லாமல், கதையாகச் சொல்ல வேண்டும் என்று சொல்லி தளத்தை களமாக்கினார். இந்த நாவலை முழுமைப்படுத்திய அந்த முழுமையான இலக்கிய ஞானவானுக்கு என் நன்றி. தேவியில் நான் தொடர்கதை எழுதியே ஆக வேண்டும் என்று என்னை வற்புறுத்தியவர் இலக்கிய வீதி அமைப்பாளரான, என் எழுத்தாளா நண்பா இனியவன். தொடர்கதையாக எழுதும்போது. சொல்ல வேண்டிய விவகாரங்கள் விடுபட்டுப் போகலாம் என்று நினைத்து நான் தயங்கிய போது, கிட்டத்தட்ட அடிக்காத குறையாகப் பேசி எழுத வைத்தவர் நண்பர் இனியவன். இவர் உருவாக்கியிருக்கும் இளந் தலைமுறையினரான வெங்கடேச ரவி, மது, ராஜேந்திரன், எம்.வி. குமார் போன்ற கவிஞர்களும், எழுத்தாளர்களும் (இரண்டையும் செய்யக் கூடியவர்கள்) தொடர்கதையை, காரசாரமாக விமர்சித்து என்னைக் கதாநாயகனாக்கினார்கள். தாமரை உதவி ஆசிரியர் சோமு அவர்கள். இந்த நாவல் வெற்றிகரமாக வெளிவருவதற்கு எல்லா வகையிலும் உதவினார். மிகச் சிறந்த எழுத்தாளரும், கவிஞருமான திரு. இளவேனிலை, எனக்கு அறிமுகப்படுத்தி, அவரையே ஒரு அற்புதமான அட்டைப்படத்தை வரையச்