பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 73 நடந்தது?" என்று கேட்கும்போது, ஆறாவது வகுப்பில் படிக்கும் பையன்கள் நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் என்ற ஒளவையார் பாட்டை ஒப்பாரி வைப்பார்கள். அந்த ஒப்பாளி, முதல் பானிபட் போரில் அடிபட்டுக் கிடந்தவர்களின் கூப்பாடு மாதிரி. ஐந்தாவது வகுப்பில் கேள்வி கேட்ட ஆசிரியருக்குப் பதிலாக வரும். பயல்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமிருக்காது. இதுபோல், ஏழாவது வகுப்பில் எழுவாய் என்றால் என்ன வென்றால் எழுவாய்' என்று ஒரு ஆசிரியர், திக்கித் திணறி பாடஞ் சொல்லிக் கொண்டிருக்கும்போது, எட்டாவது வகுப்பு மாணவர்கள், ஆசிரியர் தங்களைத்தான் எழுந்திருக்கச் சொல்கிறார் என்று நினைத்து, இடுப்பு நிஜார்களைப் பிடித்துக் கொண்டே நிற்பார்கள். இப்படி 'நெருக்கமான பள்ளிக்கூடம் அது. நூறு மாணவர்களுக்காகக் கட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தில், ஐந்து வகுப்புகளுக்காகக் கட்டப்பட்ட அந்தப் பழைய பாடாதிக் கட்டிடத்தில், இப்போது ஐநூறு மாணவர்கள்: எட்டு வகுப்புகள். இந்த லட்சணத்தில், ஒருசில வகுப்புகளுக்குப் பல செக்ஷன்கள், - இவ்வளவுக்கும். மானேஜர் ஜம்புலிங்கம், புதிய கட்டிடம் கட்டியிருப்பதாகவும், பீரோ, விஞ்ஞானக் கருவிகள், சாய்வுப் பெஞ்சுகள் இருப்பதாகவும் கணக்குக் காட்டி, அரசாங்கத்திடம் இருந்து கிராண்ட் வாங்குகிறவர். ஆகையால், தமது சுழல் நாற்காலி சிம்மாசனத்தில் கிராண்டாக உட்கார்ந்து கொண்டு. இரண்டு ரிஜிஸ்டர்களை கையிலேந்திக் கொண்டிருந்த கண்ணாடி ஆசிரியை ஒருத்தியை விளாசிக் கொண்டிருந்தார். "ஏம்மா... கொஞ்சமாவது ஒனக்கு புத்தியிருக்கா?" அந்த ஆசிரியை அவரை நிமிர்ந்து பார்க்காமலே, மருவினார். இந்த ஜம்புலிங்கத்திற்கும், பாடஞ்சொல்லிக் கொடுத்தவர் அந்தப் பெண்மணி. அப்போது, இவரது அப்பாவும், முத்துச்சாமியின் மகனுமான தங்கச்சாமி மானேஜர். ஜம்புலிங்கத்திற்கு, அரிச்சுவடி சொல்லிக் கொடுத்ததே. இந்தக் கண்ணாடி ஆசிரியை தான். புத்தியிருக்கான்னு கேக்குறான்... அதுவும், "மாதா, பிதா, குரு. தெய்வம் என்று சொல்லிக் கொடுத்த ஆசிரியை யிடமே கண்ணாடி ஆசிரியையான அந்த குருவுக்கு, இப்போது தெய்வமாக விளங்கும் ஜம்புலிங்கம். ரிஜிஸ்டர்களைப் பிடுங்கிக் கொண்டு, பக்கங்களைப் புரட்டிக் கொண்டே, ஆள்காட்டி விரலால் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்டார்: "ஏம்மா... மாடக்கண்ணுக்கு... வகுப்பு அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டர்ல ஆப்ஸண்ட் போட்டிருக்கிங்க... அதே சமயம் நண்பகல் உணவு ரிஜிஸ்டர்ல பிரஸ்ண்ட் போட்டிருக்கிங்க... வகுப்புக்கு வராம... அவன் எப்படி சாப்பிட முடியும்?" ஆசிரியை மென்று விழுங்கினார். பேப்பர்ல சாப்பாடு போடுறபோது வராதவன். சாப்பிட்டிருப்பான்... போடாத சாப்பாட்டுக்கு, வராதவன்