பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஊருக்குள் ஒரு புரட்சி ஒரு மணி நேரத்திற்குள் போலீஸ் வந்தது. இடும்பன்சாமியை இழுத்தார்கள். எதிர்ப்புத் தெரிவித்த சக ஆசிரியர்கள் இருவரையும், சின்னக் கோஷ்டியின் மூன்று ஆசாமிகளையும் ஜீப்புக்குள் போட்டார்கள். ஊரில், சில பகுதிகளில் 'கெட்ட வார்த்தைகள் திட்டுத் திட்டாகக் கேட்டன. 1 1 சிாமக் கோழி கூவிய சமயம். பிச்சாண்டியும், இன்னும் நான்கைந்து பேர்களும், மாசானம், கண்ணு தெரியாத கிழவிகிட்ட வாங்கிப் போட்ட வயலில், பன்னரு வாளும் கையுமாக நின்றார்கள். வயல், நெற்பயிர்களாலும், நெற் பயிர்கள் நெல்மணிகளாலும் மோனமாகப் பேசிக் கொண்டிருந்தன. பிச்சாண்டிக்கு, பெயருக்கேற்ற அளவுக்குத்தான் சொத்து. அதுவும் புஞ்சை. மானாமாரி கிணற்றை நம்பும் மங்கல மில்லாத காடு. அதனால் தான், மாசானம் நிலத்தை குத்தகைக்கு எடுத்தான். முப்பது வயதிருக்கும். கல்யாணம் ஆனபிறகுதான், தனக்கும் பணம் வேண்டுமென்று நினைத்தான். மாசானத்திடம் வயலைக் கேட்டபோது, அவரும் தட்டாமல் கொடுத்தார். குத்தகை ரேட்டுப் பேசவில்லை. பேச வேண்டிய அவசியமிருப்பதாக இருவரும் நினைக்கவில்லை. பன்னருவாளுடன், அவனும், அவன் ஆட்களும் குலை சாய்க்க நுழைந்தபோது, மாசானம், காண்டிராக்ட் ஆட்களுடனும், குமாரின் சொந்தக்காரர்களுடனும், அங்கே வந்தார். ஒவ்வொருவரும் வேல்கம்பு வைத்திருந்தார்கள். ஒரு சிலரிடம் பன்னருவாட்கள் வேறு. கதிர்வேல் பிள்ளை கைங்கரியம்! பிச்சாண்டி, அப்பாவித்தனமாகக் கேட்டான்: "என்ன மாமா... வேட்டைக்குப் போறியளா..." மாரானம், தன் கையாட்களை யோசித்துப் பார்த்து, சமரச சன்மார்க்க சீலத்திற்கு வந்துவிடக்கூடாதே என்பதற்காக, அவர் எடுத்த எடுப்ப்ே, பெரிய எடுப்பு. "வயலுக்குள்ள போவாத..." "ஏன் மாமா? ..." "போவாதன்னா போவாத.." "σούτ μπιρπή" "கதிர்வேல் பிள்ளகிட்ட என்ன சொன்ன..." "ஒண்னுஞ் சொல்லலியே.." "வெள்ளாமையில... முக்கால்வாசி ஒனக்குன்னு சொல்லல." "ஆமாம். சொன்னேன்... நாற்பது அறுபதுன்னு இருந்தத சர்க்கார் எழுபத்தஞ்சு... இருபத்தஞ்சுன்னு போட்டிருக்கு... வேணுமுன்னால் கிராம சேவக்கக் கேட்டுப் பாரும்..."