பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 79 "நான் எதுக்குல கேக்கணும். செறுக்கி மவன..." "மாமா வார்த்தய விடாதயும்..." "ஏமுல விடமாட்டேன்? பாதிக்குப் பாதின்னு எல்லாரும் பயிரிடயில, ஒனக்கு மட்டும் கொம்பால முளைச்சிருக்கு" "ஆமாம்... உரிம என்கிற கொம்பு இப்ப முளைச்சிருக்கு." "இந்தக் கொம்ப சீவிவிட்ட சின்னான் பயலயும் சீவுறனா... இல்லியான்னு பாரு. இந்தா... பேச்சிமுத்து... காடசாமி. வயல அறுங்கப்பா... தேவடியாமவன் என்ன பண்ணுதான்னு பாப்போம்..." பிச்சாண்டிக்கு அதற்குமேல் தாளமுடியவில்லை. "வயலுல இறங்குனா... கொல நடக்கும்." பிச்சாண்டி சொல்லி முடிக்கு முன்பே, இரண்டு பேர், அவனை விலாவில் குத்தினார்கள். பிச்சாண்டியின் ஆட்களில் பாதிப்பேர் ஓடிவிட்டார்கள். மீதிப்பேர் பன்னருவாட்களை தூக்குவதற்கு முன்பே வேல் கம்புகளால் குத்தப்பட்டார்கள். பிச்சாண்டியையும், எஞ்சிய ஐவரையும் இழுத்துக் கொண்டுபோய், அருகே இருந்த தென்னை மரங்களில் கட்டிவைத்தார்கள். பிச்சாண்டி தான் பயிரிட்ட வயலில், தான் விதைத்த நெல்லை. மாசானம் ஆட்கள் அறுப்பதை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னையே அறுப்பதுபோல் அவன் துடித்தான். இருட்டில், கண்மூடி கண் திறப்பதற்குள் நடந்துவிட்ட கதை. அக்கம் பக்கத்து வயல்களுக்கு ஆட்களே வரவில்லை. பொழுது விடிந்தபோது. நெற்பயிர் கட்டுக்கட்டாகக் கட்டப்பட்டு, குளத்துக்கரைக்குக் கொண்டு போகப்பட்டது. பிச்சாண்டியால் பிரமிப்பில் இருந்து விடுபட முடியவில்லை. இப்படியும் நடக்குமா... இப்படியும் நடக்குமா...? இதற்குள், கருப்பட்டி காபி போட்டு அதை ஒரு ஈயப் பாத்திரத்தில் கொண்டு வந்த அவன் மனைவி, புருஷனைப் பார்த்துவிட்டு, கோவென்று கதறினாள். அவனைக் கட்டிப் பிடித்து அழுதாள். அவள் அழுத போதும், பொழுது முழுதாகப் புலராத சமயம். சத்தங்கேட்டு, அக்கம் பக்கத்தில் வயல் வேலைக்காக வந்திருந்தவர் கள். யாரோ கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக நினைத்து, அங்கே ஒடி வந்தார்கள். வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஹரிஜன விவசாயக் கூலிகள். பிச்சாண்டியையும், அவன் தோழர்களையும் கட்டுகளை அவிழ்த்துவிட்டார்கள். அந்த அறுவரும் குன்னிப்போய் நின்றார்கள். ஒரு ஹரிஜன விவசாயக் கூலி அதட்டினான். இன்னொருவன் சின்னானைக் கூட்டிக் கொண்டு வருவதற்காக ஓடினான். "என்ன மாசானம் மொதலாளி... நீரு பண்ணுனது நல்லதுக்கா... இல்ல கெட்டதுக்கா..." "நீ எப்டி எடுத்துக்கிட்டாலும் சரிதான்..."