பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 81 "ஒமக்கு இது பத்தாது. கலகக்காரப் பயலுவ பேச்சுக் கேட்டு ஆடுற ஒம்மை... என்ன பண்ணுனாலும் தகும்..." பிச்சாண்டி, அதிர்ச்சியோடு குமாரைப் பார்த்தான். இந்த மாதிரியான கடுமையை, அவன் எதிர்பார்க்க வில்லை. அப்படியானால், வழியில் பார்க்கும் போதெல்லாம், தன்னை அவன் சித்தப்பா சித்தப்பா...' என்று அழைத்ததெல்லாம். தாசி. தன்னிடம் வருபவனை அத்தான்"னு சொல்றது மாதுரியா?... பிச்சாண்டி, குமாரை அதிர்ச்சியோடயே பார்த்தான். பார்த்துக்கொண்டே இருந்தான். சின்னான் பெளயமாகப் பேசினான்: "பிச்சாண்டி மொதலாளி... அவரு... இப்போ தலைவரு... ஒன்கிட்ட ஒரு வோட்டுதான் இருக்கு..." குமார், அனல் கக்க சின்னானைப் பார்த்துக் கத்தினான்: "சின்னான். நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன். எல்லைய மீறுற, ஒங்க ஜனங்கள கெடுத்துட்டு. கடைசியில... எங்க ஜனங்களையும் கெடுக்கப் பாக்றது ஒனக்கு நல்லதா முடியாது..." "எங்க ஜனங்கன்னா என்ன அர்த்தம் குமார். இந்த பிச்சாண்டி ஒங்க ஜனம்... அவர கட்டி வச்சது ஒங்க ஜனம். விடுவிச்சது எங்க ஜனம்... பிச்சாண்டி முதலாளி. இப்போ சொல்லும்... நீரு எங்க ஜனமா... அவங்க ஜனமா..." நிலைமையை, கதிர்வேல் பிள்ளை வேறு திசைக்குத் திருப்பப் பார்த்தார். "சேரி ஜனங்க பேச்சக் கேக்காதியடா... பள்ளுப் பறையங்களுக்கு இடங்கொடுக்காதியடா... அப்புறம் நரிக்கு நாட்டாம கொடுத்ததால் கிடைக்கு ரெண்டாடு கேட்ட கதயா முடியும். ஏ. மாசானம்... ஒனக்கு அறிவிருக்கா... அவன இப்டியா கட்டி வைக்கது. சீ... நீயில்லாம் மனுஷனா..." பரமசிவமும், தன்பாட்டுக்குப் பேசினார்: "மாப்புள்ளக்கி... முன்யோசனயே கிடையாது. இந்த பிச்சாண்டி யாரு... நம்ம பல்லையே நாம குத்தி நாத்தம் பாக்கலாமா... நீரு பண்ணுன அக்கிரமத்துக்கு கோயிலுக்கு... ரெண்டு தேங்கா அபராதம் போட்டிருக்கு..." கதிர்வேல் பிள்ளை, புதிர்வேல் பிள்ளையாகப் பேசினார்: "வீடு ரெண்டுபட்டா... கூத்தாடிக்குத் தொக்குடா. எல்லாத்தயும் ஊர்ல போயி கேட்டிக்கலாம்... வெள்ளாமய எப்டி பிரிக்கதுன்னு ஊர்ல போயி தீத்துக்கிடலாம்." ஜாதி விவசாயக் கூலிகளில் ஒரு சிலர், கொஞ்சம் சத்தம் போட்டே கேட்டார்கள். 2a3.6.