பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஊருக்குள் ஒரு புரட்சி வர நினைத்தான். தங்கையைக் கவனிக்காமல் போனதற்காகத் தவித்தான். இன்னும் இரண்டு நாட்களில், அவளை தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு போயாவது. ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். தாலுகா அலுவலகம், இழவு வீடு மாதிரி தலைவிரி கோலமாகக் கிடந்தது. முன்பு தன்னிடம் கடிதத்தை வாங்கிய கிளார்க்கை அடையாளம் கண்டுகொண்ட ஆண்டி, "ஸ்ார். நான் பத்து நாளைக்கு முன்னால ஒரு காகிதம் கொடுத்தேன்... தாசில்தார்கிட்ட கொடுத்தியளா..." என்றான். கிளார்க், அவனை சம்திங்காகப் பார்த்தான். பிறகு நத்திங்காக நின்ற ஆண்டியை முறைத்துப் பார்த்துக் கொண்டு நீ யாருய்யா? என்றான். "ஆண்டி.." "பெரிய கவனர்னரு... பேரச் சொன்னதும் ஞாபகம் வந்துடும்..." ஆண்டி, ஏதோ சொல்லப் போனான். சொல்ல வில்லை. கிளார்க் வந்தது தெரியாமல் போய்விட்டான். அரசாங்கம் என்பது தான் ஒருவனே என்பதுமாதிரி, அங்கே எல்லா ஆசாமிகளும் நடந்து கொண்டார்கள். ஆண்டியப்பன் காத்திருந்தான்... காத்திருந்தான்... தாசில்தாரைப் பார்க்கமுடியவில்லை. பார்க்கப்போனால், டாலிக்காரன் விடுவதாக இல்லை... என்னவே. தாசில்தார வெறுங்கையோட பார்க்கிறதுன்னா... அவ்வளவு லேசா. பையில இருக்கத கொடுத்தா... கையில இருக்கதயும் Lurrrrät AE537tb..." ஆண்டியப்பன் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய அவசரத்தில், தான் கொண்டுவந்த கருணைமனுவை, பியூனிடமே கொடுத்துவிட்டு மடமடவென்று ஆஸ்பத்திரிக்குப் போனான். 'பிஸியயே டிஸ்ளலீஸாகக் கொண்ட டாக்டர்களிடம் பேச அவனுக்குக் கூச்சமாக இருந்தது. எப்படியோ ஒருவரைப் பார்த்துக் கேட்டான். அவர் "யோவ். பேஷண்ட பார்க்காம எப்டிய்யா மருந்து கொடுக்க முடியும்" என்று கோபமாகச் சொல்லிவிட்டு, அருகே இருந்த ஹவுஸ் சர்ஜனிடம் "இன்னும் கிராமம் திருந்தலன்னு சொன்னா... நம்ப மாட்டேன்னு சொன்னிங்க... இப்போ ஒட் இஸ் யுவர் ரிப்ளை" என்றார். பிறகு இருவரும் ஆங்கிலத்தில் எதையோ பேசி, சிரித்தார்கள். ஆதார மனிதனாக இருக்க வேண்டிய ஆண்டி, அங்கே "ஆதாரமாக்கப்பட்டான். ஆஸ்பத்திரி என்ற அந்த மயான பூமியில் இருந்து, கூனிக்குறுகி ஆண்டியப்பன் வெளியே வந்தான். விடுவிடுவென்று நடந்தான். கோணச்சத்திரத்தைத் தாண்டி, ஊர்ப்பக்கம் வந்த போது, தங்கம்மா தலையில் புல்லுக்கட்டுடன் போய்க்கொண்டிருந்தாள். ஆண்டியப்பன் வேகவேகமாக நடந்து, அவளோடு இணையாக நடந்தான். தங்கம்மா, வேறு புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.