பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஊருக்குள் ஒரு புரட்சி கழுத்துக்குக் காவலா இருந்தது. ஒன் கைக்குக் காவலா இருக்கட்டும்" என்றாள். பொழுது புலர்ந்தது. எஞ்ஜினியரிங் டிப்ளமாக்காரன் கோபால் காலையிலேயே பெட்டி, படுக்கைகளோடு வந்தான். "உம்... புறப்படு... டயமாயிட்டு" என்றான். "பெட்டி படுக்கையோடு வந்திருக்கே..." "அப்புறமா பேசலாம். புறப்படுப்பா... நாம... ஆபீஸருங்களுக்குக் காத்திருக்கலாம். ஆபீஸருங்க... நமக்காகக் காத்திருக்க மாட்டாங்க..." ஆண்டியப்பன். தங்கையிடம் கண்களால் விடை கேட்டான். மீனாட்சி, விழிகளை ஆட்டி, ஆகாயத்தில் இருக்கும் சாமியைப் பாத்துக் கையெடுத்துக் கும்பிட்ட போது, "இன்னைக்கு மட்டும் பொறுத்துக்க... நாளைக்கு அண்ணாச்சி... ஒன்ன எப்டியும் ஆஸ்பத்திரியில சேத்துடு தேன்..." என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். கோபால், அவன் கையை ஆதரவாகப் பிடிக்க, இருவரும் புறப்படார்கள். பள்ளிக்கூடத்தின் அருகே வந்த ஆண்டியப்பன், மீண்டும் தங்கையைப் பார்த்துவிட்டு வர நினைத்தவன் போல் நின்று, திரும்பப் போனான். இதற்குள் அங்கே இடும்பன்சாமியும், பிச்சாண்டியும், இன்னும் சிலரும், ஆசாரிப் பையன் ஆறுமுகமும் வந்தார்கள். சஸ்பெண்ட்டிலேயே இன்னும் காலத்தைக் கழிக்கும் இடும்பன்சாமி, சத்தம் போட்டுக் கத்தினார். "விட்டுக் கொடுத்துடாதடா... செறுக்கி மவனுவள... செருப்பால அடிக்கணும்..." "ஒம்ம விஷயம் என்னாச்சி..." "எனக்காவ... சப்போர்ட் பண்ணுன ரெண்டுபேரையும் நேத்து சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்களாம். பாத்துப்புடலாம். இத விடப்போறதில்லை. நீயும் விடப்படாது... மாட்ட வாங்கித்தான் ஆகணும். போன வருஷம். பிச்சாண்டி பேர்ல வாங்குன மாட்ட இவன் கிட்டயே திருப்பிக் கொடுத்துட்டேன்... வேணுமுன்னால், இவங்கிட்டேயே, கேளு. ஏல. பிச்சாண்டி... நல்லது செய்ததையும் சத்தம் போட்டுச் சொல்லணுமில்ல..." பிச்சாண்டி, சத்தம் போட்டே சொன்னான்: "சின்னய்யா சொன்னது வாஸ்தவந்தான். இதே மாதிரி ஒன் மாடும் வீட்டுக்கு வரணும்... தேவடியா மவனுவ... தாஜா பண்ணப் பாப்பாங்க... நம்பிடாத... நான் நம்பி மோசம் போனேன்... எனக்கு... வெள்ளா மையில முக்கால் பங்கு தாரதா பரமசிவம் விலக்குத் தீர்த்தான்... கடை சில இருபது மூட்ட நெல்ல பத்து மூட்டயா கணக்குக் காட்டி... முக்கால் பங்க வாங்கிக்கச் சொல்லுதானுவ... கொல நடக்கப் போவுது பாரு..." ஆசாரிப் பையன் ஆறுமும், தன் பங்குக்கும் பேசினான்: