பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 89 "குமாரு... பரமசிவம் வகையறா... திருநெல்வேலிக்கு டாக்ஸியில போறானுவ... செறுக்கி மவனுவள ஒரே வெட்டா வெட்டணும். அவனுகளோட எங்க தட்டாசாரியயும்... தீயில போட்டு புடம் போடணும்..." இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. பரமசிவம் சொந்தக்காரர் ஒருவர். ஆசாரிப் பையனைப் பார்த்து "ஏல ஆசாரி... வார்த்தய அளந்து பேசுல. இல்லன்னா செருப்படி படுவ... படுவாப் பயல... யாரல செறுக்கி மவன்னு சொல்லுத... இன்னொரு தடவை சொல்லு பார்க்கலாம்..." கூட்டத்தில் நின்ற இன்னொருவன், இடும்பன்சாமியைத் தடுத்துவிட்டுப் பேசினான்: "நான் சொல்லுதேன்... பரமசிவம் செறுக்கி மவன், குமார் தேவடியாமவன்... இப்போ... உன்னால ஆனதப் பாரு..." சொன்னவர், "நான் எதுக்கு சொன்னேமின்னால்..." என்று இழுத்தபோது, இடும்பன்சாமியை இப்போது, ஒரு நடுத்தரப் பெண் மணி... தெய்வானை தடுத்துவிட்டு "ஏல. சுடல... மரியாதியா போ... இல்லன்னா... நானே ஒன் தலையில்... சாணியக் கரச்சி ஊத்துவேன்... ஒன் பரமசிவம்... ஊர குத்தகையால எடுத்திருக்கான் பிச்சாண்டிக்கு சொன்னபடி கொடுத்தானா? இந்த ஆண்டிப் பயல... என்ன பாடு படுத்துறான் பாத்தியா? மரியாதியா போ... இல்லன்னா..." ஆண்டியப்பன். அவர்களை நேராகப் பார்த்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான். கோபால் மட்டும் கூனிக் குறுகி நிற்பதுபோல் தோன்றியது. இருவரும் ஊரைக் கடக்கும்போது, சிநேகித பாவமான முகங்கள் தெரிந்தன. டிக் கடைக்காரர் ஒருவர் "டி சாப்புடுங்கடா..." என்றார். ஆண்டியும், கோபாலும். கோணச்சத்திரம் வந்து, கட்டபொம்ம னுக்குள் புகுந்தார்கள். "கூட்டுறவே நாட்டுயர்வு என்ற போஸ்டர் பளபளப்பான பளபளப் புடன் ஜொலிக்க, சன்மைக்கா போட்ட மேஜை, வழவழப்பான வழவழப் புடன் மினுங்க, வல்லவர்களுக்கு யெஸ் போடவேண்டும் என்பதாலோ என்னவோ ஆங்கில எஸ் எழுத்தின் வடிவத்தில் அமைந்த நாற்காலியில், மாவட்ட அதிகாரி உட்கார்ந்திருந்தார். எதிரே, போடப்பட்டிருந்த நாற்காலிகளில் 'பழைய பஞ்சாயத்து' பரமசிவம், கூட்டுறவு சங்கத்தலைவர், குமார், மாணிக்கம், மாசானம் உட்கார்ந்திருந்தார்கள். "நீங்கதான் மினிஸ்டர்கிட்ட சொல்லி, எனக்கு..." என்று பேசிய அதிகாரி, ஆண்டியப்பனும், கோபாலும் அங்கே வந்து நிற்பதைப் பார்த்து விட்டு, தனது டெபுடேஷன் முயற்சி, அங்கேயே அவுட்டானதுபோல். கண்களை இமைகளுக்கு வெளியே அவுட்டாகி அவர்களை அதட்டினார். "நீங்க யாரு?" "என் பேரு கோபாலு. இவரு... ஆண்டியப்பன்... விசாரணைக்கு வந்திருக்கார்..." 莎