பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஊருக்குள் ஒரு புரட்சி "ஒங்களைப் பார்த்தா படிச்சவர் மாதுரி தெரியுது... மானேர்ஸ் வேண்டாம். முதல்ல வெளில போய் நில்லுங்க... சீட்டுக் கொடுத்து அனுப்புங்க... கூப்பிட்ட பிறகு வாருங்க..." ஆண்டியப்பனும், கோபாலும் வெளியே போய் நின்று கொண்டார்கள். உள்ளே கிரஷ் பாட்டல்கள் உடைக்கும் சத்தம் கேட்டது. குடிக்கும்போது ஏற்பட்ட விக்கல் கேட்டது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் உள்ளே அழைக்கப்பட்டார்கள். மாவட்ட அதிகாரி விசாரணையைத் துவக்கினார். "நீங்க... கோபாலா? உங்களை நான் கூப்புடலியே... வெளியே போங்க..." ‘இவங்க மட்டும் எப்படி வரலாம் என்று கேட்கப்போன கோபால், கோபத்தை அல்லது பயத்தை அடக்கிக் கொண்டு. ஆண்டியப்பனுக்கு மட்டும் கேட்கும் வகையில், "நான் பஸ் ஸ்டாண்ட்ல நிக்கேன். நீ வா" என்று சொல்லிவிட்டு, வெளியேறினான். அவன் வெளியேறுவது வரைக்கும் பேசாமல் இருந்த அதிகாரி, விசாரணையைத் துவக்கினார். "ஏய்யா... இவருதான் ஒன் மாட்ட பிடிச்சாரா?" ஆண்டி, அவர்களை நோட்டம் விட்டான். விசாரணையின் பிரதிவாதி உட்கார்ந்திருக்கிறார். வாதி. நிற்கிறான். அநியாயம் அமர்ந்திருக்க, நியாயம் நிற்கிறது. அவன் கோபத்தை அடக்கிக் கொண்டே பதிலளித்தான்: "இவரு... அதுதான் இந்த பரமசிவம்..." "கேள்விக்கு பதில் சொல்லுய்யா... மாட்டப் பிடிச்சது யாரு..." "இவரு ஆள் வச்சி..." பரமசிவம், எகிறினார். "இவனும் இவன் மாமனும் சண்டை போடுறது மாதுரி போட்டு, மாட்டை எங்கேயோ வித்துட்டு... என் மேல பழியை போடுறான். இவனுக்கு... ஜாமீன் கையெழுத்துப் போட்ட பாவத்துக்காவ... நான் கூட்டுறவு சங்கத்துல... பணத்த கட்டி தொலைக்கேன். இனிமேல... இவன் இவ்வளவு பேகன பிறகு... நான் பணம் கட்டுறது. அபராதம் கட்டுறது மாதுரி... கட்ட மாட்டேன். கட்டவே மாட்டேன். சர்க்கார் கடனை,. ஏப்பம்விட பாக்குறான்." அதிகாரி. பரமசிவத்தை கையமர்த்தி, அபயம் அளித்து விட்டு, ஆண்டியை, அபாயமானவன்போல் பார்த்துக் கொண்டு அதட்டினார். "மாட்டைப் பிடிச்சது யாரு?" "அடைக்கலசாமி!" "அவர் எங்கே...?" "செத்துட்டார்..." "டெத் சர்ட்டிபிகேட் கொண்டு வந்திருக்கியா..."