பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஊருக்குள் ஒரு புரட்சி விஞ்ஞானப் பூர்வமான உணர்வு மாற்றங்களின் ரசாயன சேர்க்கையால், கிட்டத்தட்ட விபரீத மனிதனாக நடந்து கொண்டிருந்தான் ஆண்டியப்பன். சும்மா கிடந்த சங்கை தன் காதில் ஊதி, தன்னைக் கெடுத்து, தங்களை மேம்படுத்திக்கொண்ட உள்ளூர் வேஷதாரிகளின் மோசடித் தனமான பித்தலாட்டப் பேச்சுக்கள், ஒரு அதிகாரியின் அங்கீகாரத்துடன் நடப்பதைப் புரிந்து, புரிந்ததால் நடந்து, நெல்லை நகர வீதி ஒன்றில், நீதிக்கே பலியானவன்போல் ஆவேசமாக நடந்த அவன் எதிரில், அரசாங்கச் சின்னங்களான ஒரு போலீஸ் ஜீப், கட்டபொம்மன் பஸ், அமைச்சர் ஒருவரின் வருகையை வரவேற்றுப் போட்டிருந்த வரவேற்பு வளைவு ஆகிய அத்தனையும் துச்சமாகத் தெரிந்தன. பஸ்ஸில் மோதப் போகிறவன்போல் நடந்தான். மாதச் சம்பளக்கார அதிகாரிகளை நம்பி, தனது அன்றாடச் சம்பளத்தையே பறிகொடுத்த அவன், பறி கொடுப்பதற்கு இனிமேல் எதுவும் இல்லை என்பது போல், தலையைச் சாய்த்து, பற்கள் வெட்டரிவாளின் கூர்மையோடு ஜொலிக்க எதையோ பறிக்கப்போகிறவன்போல் நடந்தான். லேசாகத் துாறிய மழை பலமாகப் பெய்தது. பையில் இருந்த ஐந்து ரூபாய் நோட்டு நனைந்து விடக் கூடாது என்பதற்காக, ஒரு பெரிய கட்டிடத்தின் வெளித் தாழ்வாரத்தில் நின்றான். தற்செயலாக உள்ளே பார்த்தான். வாய்மையே வெல்லும' என்ற ஒரு வாசகம், அவனிடம் யாசகம் செய்வது போல் கெஞ்சியது. பிறகு, வாசல் படிக்கட்டிற்குமேல் ஜொலித்த போர்டைப் பார்த்தான். மாவட்ட விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் என்ற வார்த்தைகள், அவன் கண்களில் குத்தி, காதுகளில் உபாதையைக் கொடுத்தன. 'இந்தக் கட்டிடத்தில் நிற்பதைவிட, மழையில் நனைவது எவ்வளவோ தேவலை என்பதுபோல், அந்தக் கொட்டும் மழையில், அவன் காறித் துப்பிக்கொண்டே நடந்தான். வெளியே வந்து வேகமாக நடந்து கொண்டிருந்தவனின் கால்கள் தாமாக நின்றன. ஒரு தையற் கடையில், சட்டையில் காஜா போட்டுக் கொண்டிருந்த ஒரு எட்டு வயதுப் பாலகனை. தையல்காரர், கத்தரியால் அவன் பிஞ்சு விரல்கள் பிசகும்படி அடிக்க, அந்தச் சிறுவன் அய்யோ அம்மா என்று கத்தாமல், குரூரமான அமைதியுடன் தான் வாங்கியதை, பெரியவனான பிறகு, இன்னும் பிறக்காத ஒரு சிறுவனுக்குக் கொடுக்கப் போகிறவன்போல், எங்கேயோ வெறித்துப் பார்த்தான். மழை நீரில் சறுக்கி, வண்டியைச் சறுக்க வைத்த ஒரு வயோதிக வண்டிக்காரரை, டிராபிக் கான்ஸ்டபிள் அறிவு கெட்ட மடையா...' என்கிறார். அந்த வயோதிகர் வயசானவனை இப்படி அறிவில்லாமக் கேட்கலாமா என்று கூறாததால், மேற்கொண்டும் வண்டியை அவரால் "சுதந்திரமாக ஒட்ட முடிகிறது.