பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

分4 ஊருக்குள் ஒரு புரட்சி சவக்களையோடு திரும்ப வேண்டியதிருக்குமா... இல்லன்னா பால்மாடு பழிமாடா மாறுமா?" கோபால், ஆண்டியையே மவுனமாகப் பார்த்தான். அவன் கண்கள், தொலை தூரத்தை துழாவுவதுபோல் பார்ப்பதையும், கைகளிரண்டும் வேல்களாய் மாறியவை போல் குவிந்திருப்பதையும் பார்த்த கோபால், "என்ன நடந்தது..." என்றான். நடந்ததை விவரித்துவிட்டு. "தேவடியா மவனுவ... என் மாமாவ தூண்டிவிட்டு. மாட்ட பிடிக்க வச்சிட்டு. கடைசில... அவரு என்கூடச் சேர்ந்து, மாட்டை விற்கதுக்கு நாடகமாடுனதா சொல்றாங்க... இவங்கள... என் மாமா போன இடத்துக்கே அனுப்புனால் என்ன? இந்த வார்த்தய கேக்கதுக்காவது என் மாமா செத்துத் தொலைக்காம இருக்கப்படாதா..." என்றான். இதற்குள் சர்வர் வந்து, "ஆட்கள் வார சமயம்... சீக்கிரமாக சாப்பிடுங்க" என்றார். ஆண்டி வெடித்தான்: "ஏய்யா... அந்த மேஜையில... நாலுபேரு. டி குடிச்ச பிறகும் பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்கள முதல்ல போகச் சொல்லய்யா... அழுக்கு வேட்டிக்காரனைக் கண்டால்... ஒன்னை மாதுரி ஏழைக்குக்கூட இளக்காரமாப் போச்சு... எங்க ரெண்டுபேரிலகூட... என்னைப் பார்த்துதான் கேட்கிற... இந்த நாட்ல ஏழைக்கு ஏழைதாய்யா எதிரி... கவலப்படாத. சீக்கிரமாச் சாப்புடுறோம். அதுக்குள்ள ஒன் மொதலாளி கொட்டப் போற காச எடுத்து... துண்டுல கட்டிக்கிடு..." சர்வர் ஒதுங்கிக் கொண்டார். இவன் ரவுடி காசு கொடுக்காமல் சாப்பிடவந்த ரவுடி. பேசப்படாது. கோபாலுக்கு, ஆண்டியப்பனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. எப்படி அடக்கமாக இருந்தவன் எப்படி மாறி விட்டான் அவனை மேற்கொண்டும் பார்த்தால், தனக்கும் ஆவேசம் வந்துவிடும் என்று பயந்தவன்போல், மடமடவென்று இட்லிகளை விழுங்கினான். சர்வர், பழிவாங்கப் போகிறவர்போல், ஆண்டியிடம் பில்லைக் கொடுத்தார். பயந்து கொண்டுதான் கொடுத்தார். இருவரும், வெளியே வந்தார்கள். நாகர்கோவிலில் இருந்து, சென்னைக்குப் போகும்-வெளியே சிங்காரமாகவும், உள்ளே சீரழிந்தும் கிடந்த எக்ஸ்பிரஸ் பஸ் வந்து நின்றது. கோபால், படுக்கையை பஸ்ஸின் "சைடில் இருந்த மூடி மறைத்த பள்ளத்தில் போட்டுவிட்டு, சூட்கேஸுடன் பஸ்ஸுக்குள் ஏறினான். ஜன்னல் ஒர இருக்கையில் அமர்ந்து கொண்டு, வெளியே நின்ற ஆண்டியப்பனின் கைகளிரண்டையும், தன் உள்ளங்கைகளில் ஏந்திக்கொண்டு புலம்பினான். "என்னை மன்னிச்சிடு ஆண்டி... ஒனக்கே தெரியும். ஐந்து தங்கைகளையும் நான்தான் கரையேற்றி ஆகணும்... அவங்க சார்பில... அவங்களுக்காகவே அப்பாஎன்னைப் படிக்கவச்சாரு... அதனால ஆயிரம்