பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 95 ரூபாய் கிடைக்கிற இந்த வேலயை... என்னால விடமுடியல... பாரின் கம்பெனி, பம்பாய்ல... இட நெருக்கடியைப் பற்றிக் கவலைப்படாமல், இந்த வேலையில் சேர்ந்தால்... படிப்படியாய் சம்பளம் கூடும். ஒன்னை நிர்க்கதியாய் விட்டுட்டுப் போறோமேன்னு நினைக்கவே கஷ்டமாய் இருக்கு. ஆனால் என்னோட குடும்பக் கஷ்டத்தையும் பார்க்காம இருக்க முடியல. தங்கச்சிகளோட கூலிவேலையில படிச்ச நான். அவங்களுக்கு கூலி கொடுக்காட்டால், கடவுள் எனக்குக் கூலி கொடுப்பார். ஆனால் ஒண்ணு மட்டும் சத்தியமாச் சொல்றேன். நான். குமார் இல்ல... நான் மாணிக்கம் இல்ல. மானங்கெட்ட மாசானம் இல்ல.. ஒன்னப்போல ஒரு ஏழை... ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குனாலும்... தங்கச்சிகளுக்காக... ஏழையா வாழப்போற பணக்கார ஏழை... நான், என்றைக்குமே ஒன் நண்பன்... எங்கே போனாலும்... என் மனசு ஒன்கிட்டதான் இருக்கும்... ஒன்கிட்டதான்... ஒன்கிட்ட. ஒன்..." கோபால், அழுகையை அடக்க முடியாமல், அதை. அதன் போக்கில் விட்டான். ஆண்டியப்பன் சிலிர்த்துப் பேசினான்: "அட எதுக்காவப்பா... அழுவுற... பொம்புளயளே அழாத இந்தக் காலத்துல... நீ ஆம்பிள அழலாமா... அப்படியே அழுதாலும் எனக்காக அழாத... நான் இப்போ துணிஞ்ச கட்டை... இது ஒண்ணு விறகா எரியனும்... இல்லன்னா ஒருவன் தலையிலயாவது விலகாம விழனும்... அழாதப்பா... நீ பம்பாய்க்குப் போய்த்தான் ஆகணும்... அஞ்சு தங்கச்சிகளும் ஒன்னையே நம்பியிருக்கையில... நீநம்பிக்கைத் துரோகம் பண்ணப்படாது... அழாதப்பா... கண்ணைத் துடைச்சு மனசையும் துடைச்சுக்கோ..." பஸ்சில் இருப்பவர்கள் எல்லோரும், தன்னைப் பார்க்கும்படி, கோபால் விம்மிக் கொண்டே பேசினான். கெஞ்சினான். கேவினான். "என் தங்கச்சிகளை... பரமசிவம்... குமார் கோஷ்டி ஏதாவது பண்ணிடப்படாதே... ஏற்கெனவே மீசைக்காரனும். குமாரோட தம்பியும் ஜாடை மாடையா கிண்டல் பண்ணுனாங்களாம். அய்யாவுக்கும் வயசாயிட்டுது..." "இந்த உடம்புல ஒரு சொட்டு ரத்தம் இருக்கது வரைக்கும்... அந்த ரத்தங் கெட்ட பயலுவளால.. ஒன் தங்கச்சிமாருக்கு ஒரு ஆபத்தும் வராது. ஏன்னால், எனக்கு பாளை அரிவாள்தான் துணை... சட்டம் என்கிறதை சட்டம் போட்டு வைக்கிற காலத்துல. அதை நான் நம்புன காலம் காலமாயிட்டு. இப்போ நானே காலனா மாறிட்டேன். ஒன் தங்கச்சி ஒருத்தியோட கையையாவது பிடிக்கணுமுன்னு இல்ல. பிடிக்க நினைச்சாலே போதும். அந்தக் கை ரெண்டா விழும். கவலப்படாமப் போ... இப்போ எந்தக் குணத்தோட இருக்கியோ, அந்தக் குணத்தோடயே திரும்பி வா... சின்னப் பிள்ளை மாதுரி அழாத... பாரு... எல்லாரும் வேடிக்க பாக்காங்க பாரு... விருதுநகர்ல போய் முகத்தை அலம்பிக்க..."