பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. ஊருக்குள் ஒரு புரட்சி எக்ஸ்பிரஸ் பல்லவன் புறப்பட்டது. கோபால், ஆண்டியின் கைகளைத் தூக்கி முத்தமிட்டான். பஸ் சக்கரங்களும், தார்ரோட்டுக்கு முத்தமிட்டுக் கொண்டே உருண்டன. பஸ்போவது வரைக்கும் ஸ்தம்பித்து நின்ற ஆண்டியப்பனின் கண்கள், அந்த பஸ் மறைந்ததும், நீரை நெருப்புக் குழம்பாக கீழே சிந்தியது. அதற்குப் போட்டி போடுவது போல், 9-6 remià அக்கினிக் குழம்பாக மாறிக் கொண்டிருந்தது. நெருக்கமானவனின் நிர்ப்பந்தடிான பிரிவுத்துயரைவிட, அந்தப் பிரிவினால் நெருக்கமானவனும் காலச் சூழலால், மனதாலும் அந்நியப்பட்டுப் போகலாம் என்ற நட்பின் எதிர்கால அச்சுறுத்தல்தான், அவனை அதிகமாக வாட்டியது. இதே கோபால, அடுத்த ஆண்டு வந்து ‘ஹாய் ஆண்டி...' என்று சொல்லிவிட்டு இவனுடைய பதிலுக்குக் காதுகளைக் கொடுக்காமலே போகலாம். இருபபவன் அவனைப் பொறுத்த அளவில் இறந்தவனாகப் போகலாம். இந்த வகையில் எதிர்காலம் என்பது இறந்த காலமாகலாம்... நிகழ்காலம்... நிதி நிகழாத காலமாயிட்டு... காதலித்த மாமன் மகள், கண் முன்னாலே மாறிவிட்டாள்... கண் முன்னால் நடந்த அநியாயம், வாய்வழி வார்த்தைகளாகக் கூட, ஊரில் வரவில்லை... எதிர்காலம் என்பது எதிரியாக வரும் காலம்... சூன்யத்தால் சூழ்ந்தவன்போல், ஆண்டியப்பன் சுற்றிச் சுற்றி வந்தான். ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல், தன்னை இழந்தவன் போல், தன்ன்னையே தானே தொலைத்து விட்டு, தேடுபவன்போல், அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, செங்கோட்டை, திருச்செந்தூர் முதலிய இடங்களுக்குப் போவதற்காக, தனித்தனி தடங்களில் நின்று கொண்டிருந்த பஸ்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு, ஊருக்குப் போய், எவனை முதலில் பொலி போடுவது என்று அவன் யோசித்துக் கொண்டே, மூலதனம் தேவை இல்லாத ஒரு திட்டத்தை அவன் தீட்டிக் கொண்டிருந்தபோது - பஸ் நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு அல்வா கடையருகே ஒரு கார் வந்து நின்றது. காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த யூனிபாரம் போட்ட இரண்டு போலீஸ்காரர்களுக்கு, குமார் ஆண்டியை, அடையாளம் காட்டினான். "கோபால்... பயலக் காணுமே... அவனதான மொதல்ல... பிடிச்சிப் போடணும்" என்றார் மாசானம், குமார், தலைவன். ஆகையால், ஒரு தாசிக்குரிய போலித்தனத்தோடு பேசினான்: "இன்ஸ்பெக்டர் சார். அவனை... நீங்க... கஷ்டப்படுத்தணுமுன்னு நாங்க் நினைக்கல... அது எங்களோட நோக்கமும் இல்ல... எங்க உயிருக்கு உத்தரவாதம் வேணும். அதுதான் எங்க லட்சியம்... ஊருக்கு வந்ததும். ஏதாவது செய்திடப்படாதே என்கிற பயத்துலதான்... ஒங்ககிட்ட வந்தோம். அவனை பழிவாங்கனும் என்கிற நோக்கத்துல வரல. நல்லவேளை எங்க சித்தி மகன்கூட... நீங்க... டிரெயினிங்