பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

டேன்". என்று சொல்லிச் சிறிது நிறுத்தினாள். பிறகு, "சரி. இப்போது கேட்கிறேன். என் மாமனாருக்கு மறுபடி அரச பதவியை மீட்டுத் தந்தீர்களே, அவரோ பார்வை இழந்தவர். பார்வை தெரியாதவருக்கு ராஜ்யம் கிடைத்து என்ன பயன்? அல்லது பார்வை தெரியாதவரால் ராஜ்யத்துக்கு என்ன பயன்?" என்று கேட்டாள்.

"உன் மாமனாருக்கு மீண்டும் நன்றாகக் கண் தெரியும்" என்றான் யமன் ஒரு சிரிப்புடன்.

இப்படிச் சொல்லிவிட்டு யமன் மேலே நடப்பதற்கு முன் சாவித்திரி மறுபடி பேசினாள். "நல்லவேளை, சரியான சமயத்தில் எனக்கு என் மாமனாரின் நினைவு வந்ததே!" என்று பதிலுக்குச் சிரித்தாள், காரியமே கண்ணான சாவித்திரி. "இது மட்டும் நினைவு வரவில்லையென்றால் நான் என்ன கேட்டிருப்பேன், தெரியுமா?" என்றாள்.

"என்ன கேட்டிருப்பாய்?"

"என் தந்தையாரின் ராஜ்யமும் என் மாமனாரின் ராஜ்யமும் செழித்து ஓங்கவேண்டும் என்று வரம் கேட்டிருப்பேன். இரண்டு ராஜ்யங்களுக்கும் நான் ஒருத்திதான் வாரிசு. நல்ல வேளை, நான் இந்த வரத்தைத் தங்களிடம் கேட்கவில்லை. எதற்காகக் கேட்கவேண்டும். இந்த ராஜ்யங்களுக்கு செழிப் பும் மகிழ்ச்சியும் ஏன் அளிக்கப்பட வேண்டும்? மக்கள் மகிழ்ச்சியோடும் வளத்தோடும் வாழும்படி பார்த்துக்கொள்வது அந்தந்த நாட்டு அரசனின் கடமை, இல்லையா?”

"ஆமாம்."

"அரசபதவி என்பது சாதாரணமா? மிக மிகப் பொறுப்பானது” என்று பயபக்தியுடன் தலையை ஆட்டியபடி கூறினாள் சாவித்திரி. "அரண்மனையில் சுகமாக வாழ்வதும், தர்பார் நடத்துவதும், கவிஞர் கலைஞர்களை ஆதரிப்பதும், வரி வசூல் செய்வதும் மட்டுமா அரசனின் கடமை? சட்டம் ஒழுங்காகச் செயல்படுகிறதா, அதிகாரிகள் குடிமக்களைத் துன்புறுத்தாமல் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அண்டை ராஜ்யங்களுடன் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக வாழவும், குடிமக்கள் எல்லாருக்கும் போதிய உணவும் உடையும் உறைவிடமும் இருக்கும்படி பார்த்து கொள்ளவும் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, தனது மக்களுக்குப் பேச்சு உரிமையும், குற்றம் குறைகளை எடுத்துச்