பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டன் வந்த மனிதர்களை விட்டுப் பிரிந்துவிட்டான். அவனுக்கு ஒரே களைப்பு, தாகம், பசி. ஆனாலும் அந்த மானைக் கொன்று அதன் வேதனையைப் போக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் தொடர்ந்தான்.

திடீரென்று அடர்ந்த மரங்களிடையே ஒரு திறந்த வெளியைக் கண்டான். அங்கே ஒரு பெரியவர், பசுக்களுக்குத் தீனி வைத்துக்கொண்டிருந்தார். அரசன் அவர் அருகே சென்றன். “ஐயா, நான் அபிமன்யுவின் மகன். இந்த நாட் டின் அரசன். அடிபட்ட மான் ஒன்றைத் தேடி வருகிறேன். அது இந்த வழியாக வந்ததா? நீங்கள் பார்த்தீர்களா?” என்று கேட்டான்.

அந்தப் பெரியவர் ஒரு மாமுனிவர். தவவலிமை மிக்கவர். பெயர் சமிகர். அன்று அவருக்குப் பேசா விரதம். அதனால் அவர் அரசர் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. ஏன் இப்படி மெளனமாய் இருக்கிறார் இந்த முனிவர் என்று அரசனுக்கு முதலில் புரியவில்லை. ‘ஓகோ. இவருக்குக் காது கேளாது போலிருக்கிறது’ என்று நினைந்து, உரத்த குரலில் விசாரித்தான். அப்போதும் முனிவர் பதில் எதுவும் கூறாமல் மெளனமாக அரசனைப் பார்த்தார். அப்போது ஒரு பசு, பால் குவளையை உதைத்தது. அந்த ஒலிகேட்டு முனிவர் சட்டெனத் திரும்பி, பால் கீழே ஊற்றாதபடி தடுத்தார். அதனால் அவர் செவிடு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டான் அரசன்.

அரசனுக்கு ஒரே கோபம். “காட்டில் வாழ்பவர்களுக்கு என்ன திமிர்?” என்று ஆத்திரப்பட்டான். ‘கடைசியாகக் கேட்போம்’ என்று எண்ணி மறுபடியும் உரத்த குரலில் மானைப் பற்றி விசாரித்தான். “உடனே தகுந்த பதில் சொல்லாவிட்டால் அரசனுகிய நான் என்ன செய்வேனே தெரியாது?” என்றும் எச்சரித்தான். சமிகர் தெரியாது என்று தலை அசைத்தார். ஆனால் அரசனே அதைத் தவரறாகப் புரிந்துகொண்டான். முனிவர் பதில் சொல்ல மறுக்கிறார் என்று நினைத்துவிட்டான். முனிவர் கண்களில் இருந்த பரிவையும்