பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அவன் கவனிக்கவில்லை. ‘ஐயோ, உதவ முடியவில்லையே?’ என்ற அவரது ஏக்கத்தையும் உணரவில்லை.

குழந்தைத்தனமான ஆத்திரம் கொண்டான் அரசன். உடனே அவரை எப்படியாவது அவமானப்படுத்தவேண்டும் என்று சுற்றுமுற்றும் பார்த்தான். அருகிலே ஒரு பாம்பு செத்துக் கிடந்தது. உடனே தன் வாளை உருவினான். கூர்மையான அதன். நுனியால் அதைச் சரேலென்று எடுத்தான். அப்படியே அதை முனிவர் மீது வீசினான். அது அவர் கழுத்தில் ஒரு மாலை போல விழுந்தது. அரசன் ஏளனமாகச் சித்தான். உடனே முனிவர் சீறி விழுவார், ஒருவேளை தன்னைச் சபித்துவிடுவார் என்றே அவன் நினைத்தான்.

சமிக ரிஷி ஒன்றுமே செய்யவில்லை. மன்னனைப் பெரும் கருனையுடன் பார்த்தார். அரசன் வெட்கமடைந்து, தலை குனிந்து, அவ்விடம் விட்டு அகன்றான்.