பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிம்கர் சற்றுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு சரேலென எழுந்தார். “குருமுகியை என்னிடம் உடனே அனுப்பு. அவனை நான் உடனே அரண்மனைக்கு அனுப்பி அரசனுக்கு இந்தச் சாபத்தைப் பற்றி அறிவிக்க வேண்டும். அரசனை முன்ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்க வேண்டும்?” என்றார்.

குருமுகி என்பவர் சாப விவரத்தை வந்து கூறவும் பரீட்சித்து அரசன், “அடடா. அன்று முனிவரது மெளன நாளா? தெரியாது போனேனே?” என்று வருந்தினான்.. இதை நானே ஊகித்துக் கொண்டிருக்கவேண்டும். தவறு என்னுடையதுதான். ஆகா. சமிகர்தான் எவ்வளவு கருணையுள்ளவர். இந்தச் சாபத்தைப் பற்றி எனக்கு முன்னதாகத்