பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'ஐயா, வாழ்விலே அநியாயத்தைப் பாருங்கள். தாங்கள் அரண்மனை க்குப் போகிறீர்கள். உங்களுக்கு உபசாரத்துடன் வரவேற்புக் கிடைக்கும். ஆனால், நானும்தான் அங்கே போக விரும்புகிறேன். என்னை உள்ளே விடமாட்டார்களே” என்று கிழவன் பெருமூச்சுவிட்டான்.

‘'நீ அரசனைப் பார்க்கவேண்டுமா??

"ஆமாம்.’’

‘'என்னை அங்கு அழைக்கக் காரணம் உண்டு. பாம்பு அரசனாகிய தட்சகன் இருக்கறானே அவன் அரசனைக் கடித்து விடுவான் என்ற பயம் இருக்கிறது. அப்படிக் கடித்தால் அரசனைக் காப்பாற்றவேண்டும். அதற்காகவே என்னை அழைத்திருக்கிறார்கள். ஆமாம், உனக்கு என்னப்பா அங்கே வேலை?

எனக்கா? அவனைக் கொல்வதுதான் என் வேலை!’' என்று கூறி அந்தக் கிழவன் தன் உண்மை உருவத்தை வெளிப்படுத்தினான். அவன் யார் தெரியுமா? அவன்தான் பாம்பரசன் தட்சகன்!

“என்ன இது சங்கடம்?’ என்று கூறினர் காசியபர். நீயோ அரசனைக் கொல்லப்போகிறாய். நானோ அரசன் உயிரைக் காப்பாற்றப்போகிறேன். நாம் ஒன்றாகப் போவதா?, தனித் தனியாகப் போவதா?

உன்னால் அரசனை எனது விஷக்கடியிலிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறாய்? என்று கேட்டான் தட்சகன்.

"ஆமாம்” என்றார் காசியபர் தயக்கமின்றி.

"எங்கே பார்ப்போம், இதோ இந்தச் செடியில் நான் விஷம் ஏற்றுகிறேன். அது உடனே பட்டுப்போகும். அதை மறுபடி துளிர்க்கச்செய்ய உன்னால் முடியுமா பார்ப்போம்? என்றான் தட்சகன்.

உடனே பாம்பரசன் தன் விஷ நாக்கால் அந்தச் செடியை தீண்டினன். சில நொடிகளில் செடி கருகிச் சாம்பலாயிற்று.

'பார்க்கலாம் உன் திறமையை’’ என்று காசியபரைப் பார்த்துச் சொன்னான் தட்சகன்.

காசியபர் ஒரு பிடி சாம்பலைக் கையில் எடுத்துக் கண்ணை மூடித் தியானம் செய்தார். பிறகு எடுத்த இடத்திலேயே அதை வைத்து மண்ணேப்போட்டு மூடினார். சில நிமிடங்களில் அந்த இடத்தில் முளை கிளம்பியது. அதில் இரண்டு

27